இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய டைகுன் எஸ்யூவி பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால், விரைவில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

கொரோனாவால் பெரும் நெருக்கடிகளை கார் நிறுவனங்கள் சந்தித்தன. ஆனால், அந்த நெருக்கடிகளில் இருந்து வேகமாக விடுபடும் வகையில் கடந்த இரு மாதங்களாக விற்பனை சிறப்பாக அமைந்து வருகிறது. இதனால், புதிய மாடல்களின் அறிமுகத்தை ஒத்திப்போட்ட கார் நிறுவனங்கள் தற்போது அதனை விரைவில் இந்திய சந்தையில் களமிறக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

அந்த வகையில், டைகுன் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டது.

இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

இந்த புதிய எஸ்யூவி மாடலானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகளுக்கு நிகரான அம்சங்களுடன் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏo ஐஎன் என்ற இந்தியாவுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், க்ரோம் பூச்சுடன் கூடிய இரண்டு படுக்கை வாட்டு சட்டங்கள் கொண்ட க்ரில் அமைப்பு, 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி விளக்கு பட்டை, ரூஃப் ஸ்பாய்லர், சில்வர் பூச்சுடன் கூடிய ரூஃப் ரெயில்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், சில்வர் பாகங்களுடன் கூடிய பம்பர்கள், அழகுக்கான ஸ்கிட் பிளேட் அமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் ஏராளமான சிறப்பம்சங்கள் இன்டீரியரை அலங்கரிக்கின்றன. இந்த எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், வயர்லெஸ் சார்ஜர், கருப்பு வண்ண இன்டீரியர் தீம், சாஃப்ட் டச் பாகங்களுடன் மிகவும் பிரிமீயமாக இருக்கிறது.

இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் புதிய 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் டர்போ உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Volkswagen India has updated its official Indian website, now adding the all-new Taigun SUV to their lineup. The new Volkswagen Taigun SUV will be the brand's next model for the Indian market, first showcased earlier this year at the 2020 Auto Expo.
Story first published: Tuesday, November 17, 2020, 13:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X