Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 5 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து அடுத்ததாக இந்தியா வரும் எஸ்யூவி, டைகுன்!! அறிமுகம் உறுதியானது
ஃபோக்ஸ்வேகன் டைகுனின் டீசர், காரின் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரில் டைகுன் காரின் வெவ்வேறு விதமான ஸ்டைலிங் மற்றும் டிசைன் பாகங்கள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் அறிமுக தேதி குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் டைகுன் முதன்முதலாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

மற்ற எஸ்யூவி மாடல்களுடன் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் இந்தியாவிற்கு இரு-சக்கர ட்ரைவ் வெர்சனில் மட்டும்தான் அறிமுகமாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது.

டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் டைகுன் விற்பனைக்கு வரவுள்ளதையும் ஃபோக்ஸ்வேகன் உறுதிப்படுத்தி இருந்தது. ஆனால் இது டி-ராக் மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் யூனிட்டின் 1.0 லிட்டர் யூனிட் தானா என்பது தெளிவாக தெரியவில்லை.

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5000 ஆர்பிஎம்-ல் 148 பிஎச்பி பவரையும், 1500 ஆர்பிஎம்-ல் 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. அதேநேரம் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 108 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும்.

டைகுனில் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கூடுதல் தேர்வாக வழங்கப்படலாம் எனவும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. அதுவே பெரிய 1.5 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டால் டிஎஸ்ஜி கூடுதல் தேர்வாக இல்லாமல் நிலையாகவே வழங்கப்படலாம்.

முற்றிலும் புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் டைகுன், உயரம் அதிகமான எஸ்யூவி கார்களை விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும். வெளிப்புறத்தில் இந்த கார் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பூட்-லிட்டிற்கு குறுக்கே லைட் பார் உடன் பின்பக்க எல்இடி டெயில்-லேம்ப்களை பெற்று வரவுள்ளது.

இவற்றுடன் இரு முனைகளிலும் ஸ்கஃப் தட்டுகள், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட க்ரில்லும், வெளிப்புறத்திற்கு ஏற்ற நிறத்தில் உட்புற கேபினில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் விரைவான சார்ஜிங் துளைகளும் காரின் மற்ற சிறப்பம்சங்களாக எதிர்பார்க்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை எஸ்ஆர்எஸ் காற்றுப்பைகள், ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் 360-கோண கேமிரா உடன் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை பார்க்க உதவும் வசதி போன்றவையும் புதிய டைகுன் எதிர்பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின் ஆரம்ப நிலை எஸ்யூவி மாடலாக இந்திய சந்தைக்கு வரும் டைகுனிற்கு விற்பனையில் போட்டி அளிக்கக்கூடிய வகையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் நிஸான் கிக்ஸ் கார்கள் தயாராகவுள்ளன.