Just In
- 39 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமெரிக்க செடான் காரை இந்தியா கொண்டுவருகிறதா ஃபோக்ஸ்வேகன்?! யாருக்கும் தெரியாமல் சோதனை ஓட்டம்
இந்தியாவில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் காருக்கு மாற்றாக வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள விர்டஸ் செடான் காரை ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிற்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ருகிற 2021ஆம் ஆண்டின் இறுதியில் முற்றிலும் புதிய நடுத்தர-அளவு செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே ஜெர்மனை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இந்த செடான் கார் மற்ற நாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மாடலாக இருக்கலாம் என தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளன.

இந்திய சந்தையில் சில முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் செடான் கார் தற்சமயம் விற்பனையில் உள்ள வெண்டோ செடான் காருக்கு போட்டியாக வெளிவரவுள்ளது.

இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் இந்த செடான் கார் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் காட்சியளிக்கும் விர்டஸ் காரின் பின்பக்கத்தை மட்டும்தான் நம்மால் பார்க்க முடிகிறது.

பின்பக்கத்தில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரை ஒத்த டெயில்லேம்ப்கள் காட்சி தருகின்றன. ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி ஏஒ ப்ளாட்ஃபாரத்தை விர்டஸ் சார்ந்ததாக உள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தில்தான் டி-க்ராஸ் மற்றும் புதிய போலோ கார்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 2021ஆம் ஆண்டின் மத்தியில் இந்த கார் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கு போட்டியாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் செடான் காரில் இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

இதில் ஒன்றான 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனையும் மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 147 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இதில் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடனும், டர்போ பெட்ரோல் என்ஜின் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும் வழங்கப்படுகிறது. வெண்டோ முத்திரையை முழுவதுமாக தவிர்க்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டு வருகிறதா என்பது நமக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை.