ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே வெர்சனான டிகுவான் எக்ஸ் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

காரின் வெளிப்புறத்தை தெள்ள தெளிவாக வெளிக்காட்டும் இந்த படங்கள் சீனாவில் இருந்து வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கோச்ஸ்பியாஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படங்களை சட்டென்று பார்த்தவுடனே காரின் முக்கிய சிறப்பம்சங்கள் நம் கண்களுக்கு புலப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

இருப்பினும் காரின் முன்பகுதி வழக்கமான டிகுவான் எஸ்யூவி (சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்) உடன் ஒத்து காணப்படுகிறது. இதன் ஹெட்லேம்ப்கள் ப்ராஜெக்டர் விளக்குகளையும், எல்இடி டிஆர்எல்களையும் கொண்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

சற்று அகலமானதாக தென்படும் க்ரில் அமைப்பில் அதன் அகலத்திற்கு இணையாக க்ரோம் ஸ்லாட்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற பம்பர் இரு பக்கங்களிலும் C-வடிவிலான க்ரோம் பாகங்களுடன் அகலமான ஏர் டேம்-ஐ கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

பக்கவாட்டு பகுதியில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை என்றாலும், சறுவலான கூபே-ஸ்டைல் மேற்கூரை இந்த குறையை இல்லாமல் செய்துவிடுகிறது. பக்கவாட்டில் ஒஆர்விஎம்களில் இருந்து துவங்கி டெயில்லைட்கள் வரையில் ஷோல்டர் லைன் காணப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

இந்த லைன்னிற்கு ஏற்றப்படியான கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த படத்தில் காரின் அலாய் சக்கரங்களும் மெஷின் வெட்டுகளுடன் ட்யூல்-டோனில் புதியதாக காட்சியளிக்கின்றன. பின்புற பகுதியில் டெயில்லேம்பின் டிசைன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

ஒற்றை துண்டாக உள்ள இந்த டெயில்லைட்கள் அம்பு வடிவிலான எல்இடி பாகங்களை கொண்டுள்ளது. இதனுடன் பூட் லிட்டில் வந்து ஒருங்கிணையும் துணை ஸ்பாய்லர், பம்பரின் இரு பக்கங்களிலும் போலி எக்ஸாஸ்ட் முனை உள்ளிட்டவற்றையும் இதன் பின்பகுதியில் பார்க்க முடிகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

மேலும் இதன் பின் பம்பரில் ஸ்போர்டியான தோற்றத்திற்கு ஃபாக்ஸ் டிஃப்யூஸர் பொருத்தப்பட்டுள்ளது. இரு வரிசையில், 5-இருக்கை என்ற கட்டமைப்பில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ் மாடலின் என்ஜின் அமைப்பு குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போதைக்கு கிடைக்கவில்லை.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

இருப்பினும் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். 184 பிஎச்பி/300 என்எம் மற்றும் 220 பிஎச்பி/300 என்எம் என இரு விதமான நிலைகளில் ஆற்றல் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் ‘4மோஷன்' அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் இணைக்கப்படவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் புதிய கூபே எஸ்யூவி வெர்சன்... தோற்றம் இவ்வாறு தான் இருக்குமாம்...

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ் மாடல் சீனாவில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகவுள்ளது. அதனை தொடர்ந்தே இந்தியா உள்பட ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு வருகை தரவுள்ளது. நம் நாட்டு சந்தையை பொறுத்துவரையில் சிபியூ முறையில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த கார் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை போன்று குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Most Read Articles

English summary
Volkswagen Tiguan X Coupe SUV Leaked On Social Media
Story first published: Tuesday, July 28, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X