Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 4 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொஞ்சும் ஒசரமா தயாரிச்சுட்டாங்களாம்... இதுக்காக அவங்க செஞ்சிருக்க வேலைய பாருங்க... பாத்த மெர்சலாயிடுவீங்க!
யுட்யூப் வாசிகளை மெர்சலாக்கக்கூடிய வீடியோ ஒன்றை வால்வோ வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

உலக புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான வால்வோ சொகுசு மற்றும் லக்சூரி வாகன தாயரிப்பில் பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது. இதற்கு மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதிலும் இந்நிறுவனம் சிறப்பான நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இது, கார் மட்டுமின்றி பேருந்து, டிரக், டிப்பர் லாரி மற்றும் இழுவை எந்திரங்கள் உள்ளிட்டவற்றையும் இது தயாரித்து வருகின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையில் வால்வோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பு டிரக் ஒன்று மிக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வால்வோ நிறுவனம் புதிய டிரக்குறித்த விளம்பர வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. இந்த விளம்பரம் மிகவும் விநோதமான விளம்பரமாக இருக்கின்றது.

அதாவது, புதிய டிரக் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கின்றது என்பதை வெளிக்காட்டுவதற்காக ஓர் மனிதனை வெறும் தலை மட்டும் தெரிகின்ற வகையில் உடல் முழுவதையும் பூமியில் புதைத்துவிட்டு, அவரின் தலைக்கு மேலாக லாரி செல்லும் வகையில் காட்சியை உருவாக்கியிருக்கின்றது.

இந்த வீடியோ நமது ஹார்பீட்டை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் மிகுந்த விநோதமான விளம்பர வீடியோவாக இது இருக்கின்றது. இந்த வீடியோ எஃப்எம்எக்ஸ் சீரிஸ் டிரக்கைப் பற்றியதாகும். இதனையே 300 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வால்வோ உருவாக்கியிருக்கின்றது.

முன்னதாக 275 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் மட்டுமே இது விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. புதிய கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிக சவாலான சாலையைக் கூட மிகவும் அசால்டாக சமாளிக்க உதவும். குறிப்பாக, பாறைகள் அதிகம் குவிந்திருக்கும் குவாரிகளில்கூட மிக சுலபமாக இக்கார் பயணிக்கும். இதற்காகவே புதிய உயரத்திற்கு அது அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது.

இதுபோன்ற விநோதமான விளம்பர வீடியோவை வால்வோ வெளியிடுவது இது முதல் முறையல்ல. முன்னதாக இரு ட்ரக்குகளுக்கு இடையே வெளிப்புறத்தில் அதன் கண்ணாடிகள் மீது நின்று பயணிக்கின்ற மாதிரியான வீடியோவை அது வெளியிட்டிருந்தது.

முன்னதாக, தங்களின் டிரக்குகளில் ஸ்டியரிங் வீல் மிகவும் லேசானதாக வழங்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் வீடியோவையும் அது வெளியிட்டிருந்தது. இதில், ஸ்டியரிங் வீல் மிகவும் லேசானது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக எலி பயன்படுத்தப்பட்டிருந்தது. கேரட்டைக் காட்டி ஓட்டுநர் எலியை திசை திருப்ப, அது நகரும் திசையை நோக்கி லார் நகரும். இந்த வீடியோவை வால்வோ வெளியிட்டிருந்தது.
இதுபோன்ற முற்றிலும் வித்தியாசமான விளம்பர வீடியோக்களையே வால்வோ கடந்த சில வருடங்களாகவே வெளியிட்டுவருகின்றது. குறிப்பாக கடந்த ஏழு வருடங்களாகவே இதுமாதிரியான விளம்பர வீடியோக்களை அது வெளியிட்டு வருகின்றது.