வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

தனது அசத்தலான டிசைனால் இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட, வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி காரின் விலையில் ரூ.3 லட்சம் நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

இந்தியாவின் ஆரம்பர ரக சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் வால்வோ எக்ஸ்சி40 கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அசத்தலான தோற்றம், போட்டி கார் மாடல்களில் இல்லாத ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கும் நிகழ்நேர பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

இந்த நிலையில், எக்ஸ்சி40 சொகுசு காரின் சந்தையை வலுப்படுத்துவதற்காக, இதன் மதிப்பை கூட்டும் விதத்தில் விலையில் ரூ.3 லட்சம் தள்ளுபடி வழங்குவதாக வால்வோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

வால்வோ எக்ஸ்சி40 கார் ரூ.39.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த தள்ளுபடி சலுகை மூலமாக ரூ.36.9 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து இனி வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் கிடைக்கும்.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

இந்த சிறப்பு தள்ளுபடியானது Hassle Free Offer என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த காரை எந்த சிரமமும் இல்லாமல், மன நிறைவுடன் வாங்குவதற்காக இந்த புதிய தள்ளுபடி வழங்கப்படுவதாக வால்வோ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி காரின் பிஎஸ்-6 மாடல் பெட்ரோல் எஞ்சினுடன் டி4-ஆர் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

வால்வோ எக்ஸ்சி40 காரில் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

வால்வோ கார்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றவை என்பது தெரிந்த விஷயம். அந்த வகையில் இந்த காரிலும் பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன. அதில், குறிப்பாக, போட்டி கார் மாடல்களில் இல்லாத ஒரு பாதுகாப்பு நுட்பத்தை இந்த கார் பெற்றிருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

இந்த காரில் வழங்கப்படும் டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பமானது, கார் 50 கிமீ வேகத்திற்குள் செல்லும்போது, சாலையின் குறுக்கே பாதசாரிகள், வாகனங்கள் வருவதை ரேடார் உதவியுடன் கண்டறிந்து முன்கூட்டியே மோதல் ஏற்படுவதை தடுத்துவிடும்.

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி!

வால்வோ எக்ஸ்சி40 காரின் டிசைனும், தொழில்நுட்ப அம்சங்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில், தற்போது ரூ.3 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருப்பது நிச்சயம் இதன் மதிப்பை வெகுவாக கூட்டும் வகையில் உள்ளது. இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Car India has announced that the company is offering a discount of Rs 3 lakh on the ex-showroom price of its SUV XC40.
Story first published: Thursday, August 13, 2020, 10:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X