இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது!! வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது

வால்வோ கார் பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அந்நிறுவனத்தின் விற்பனை கார்களில் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது!! வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது

வால்வோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து விற்பனையில் இருந்த வி90 க்ராஸ் கண்ட்ரீ காரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. வி90 க்ராஸ் கண்ட்ரீ, ஸ்டேஷன் வேகனின் க்ராஸ்ஓவர் வெர்சன் ஆகும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது!! வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது

முதன்முதலாக 2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் வால்வோவின் எஸ்90 காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாகும். பார்ப்பவரின் கண்ணை கவரும் வகையில் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டிருந்த இந்த காரின் உட்புறம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது!! வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது

4-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், மஸாஜ் இருக்கைகள், 19-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் சிறப்பான ஹேண்ட்லிங்கையும், உயர்த்தரத்திலான பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் பெற முடிந்தது. இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்களை இந்த வால்வோ கார் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது!! வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக இதன் 20 இன்ச் சக்கரங்கள் & குறைந்த தோற்ற வடிவத்தை கொண்ட டயர்கள் மற்றும் ஆக்ஸலேரேஷனின் போது என்ஜினில் இருந்து வெளிவரும் சிறு சிறு இரைச்சல்கள் போன்றவற்றை முக்கிய காரணங்களாக சொல்லலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது!! வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது

இந்த வால்வோ காரில் வழங்கப்பட்ட 2.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு டி5 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 232 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்தது. வால்வோ எஸ்90 காரிலும் வழங்கப்பட்ட இந்த என்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஹால்டெக்ஸ் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் வாயிலாக ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கியது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது!! வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது

வி90 க்ராஸ் கண்ட்ரீ காரின் பெயர் நீக்கப்பட்டதால், தற்சமயம் வால்வோவின் இந்திய இணையத்தள பக்கம் எக்ஸ்சி40, எக்ஸ்சி60, எக்ஸ்சி90 மற்றும் எஸ்90 என்ற நான்கு கார்களை மட்டுமே கொண்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo V90 Cross Country removed from Indian website.
Story first published: Friday, November 6, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X