வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார் நிறுவனங்கள் ஆளுமை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், வால்வோ நிறுவனமும் சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னிலை பெறுவதற்கான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

அதன்படி, எதிர்காலத்தில் மின்சார கார் மாடல்களுக்கு இந்தியாவில் வலுவான சந்தை இருப்பதை கருதி, இந்த மார்க்கெட்டில் முன்கூட்டியே களமிறங்கிவிடும் திட்டத்தை வால்வோ கையில் எடுத்துள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

இதன்படி, இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்ற எக்ஸ்சி40 ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவியின் அடிப்படையிலான மின்சார மாடலை இந்தியாவில் விரைந்து கொண்டு வருவதற்கு வால்வோ திட்டமிட்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

ஆட்டோகார் இந்தியா தளத்துடனான கலந்துரையாடலின்போது, வால்வோ இந்தியா நிர்வாக இயக்குனர் சார்லஸ் ஃப்ரம்ப், " அடுத்த ஆண்டு எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியின் அடிப்படையிலான மின்சார மாடல் ரீசார்ஜ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் மின்சார மாடலுக்கு தக்கவாறு டிசைனில் சில மாற்றங்களுடன் வர இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு மின்மோட்டார்களும் இணைந்து அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

இந்த மின்சார எஸ்யூவியில் 78kWh பேட்டரி தரைதளத்தில் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை 150kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை உறுதியானது!

ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கும். இதன்மூலமாக, அவ்வப்போது நிறுவனத்திலிருந்து நேரடியாக சாஃப்ட்வேர் மற்றும் காரின் இயக்கத்தை மேம்படுத்துவதற்கான அப்டேட்டுகள் வழங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo has confirmed XC40 Recharge EV India launch will happen sometime next year.
Story first published: Tuesday, August 18, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X