வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

விரைவில் வால்வோ நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள 2020 எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கார் எந்தவொரு மறைப்புமின்றி உள்ளது. எந்த நிறுவனத்தின் கார் என்பது தெரியக்கூடாது என்பதற்காக காரின் லோகோ மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள எந்தவொரு கார் பிரியரும் சொல்லிவிடுவார், இது வால்வோ நிறுவனத்தின் கார் என்று.

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

முந்தைய மாடலில் இருந்து இந்த பிஎஸ்6 மாடலின் வெளிப்புற டிசைனில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. இந்த 2020 மாடலின் இரு டீசல் வேரியண்ட்களுள் ஒன்றான டி5 இன்ஸ்க்ரிப்ஷன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதா என்பது தெரியவில்லை. மற்றொரு வேரியண்ட்டான டி4 மொமண்டம் மிகவும் விலை குறைந்த மாடலாகும்.

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 மாடல் ஏற்கனவே பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகிவிட்டதால் சோதனை ஓட்டத்தில் தற்போது ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் நிச்சயம் எக்ஸ்சி60 மாடலாக தான் இருக்கும். தற்போதைய வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்4 மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜினுடன் (டி5 இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்ட்டில்) அதிகப்பட்சமாக 235 பிஎச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

டி4 மொமண்டம் வேரியண்ட் இதே 2.0 லிட்டர் என்ஜினுடன் 190 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது. இந்த இரு வேரியண்ட்களில் உள்ள என்ஜின்களுடனும் அனைத்து சக்கரங்களுக்கும் ஆற்றலை வழங்கக்கூடிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 அப்டேட்டால் என்ஜினின் வெளியிடும் அளவுகளில் மட்டும் தான் இந்த கார் மாற்றத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் என்ஜினின் தரத்தில் மாற்றத்தை வால்வோ நிறுவனம் புறக்கணிக்கப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

Most Read:ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய சொகுசு கார்.. அடேங்கப்பா இதுக்கா இவ்ளோ தொகை கொடுத்து வாங்கினாங்க?

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

புதிய வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடலின் டி5 இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்ட் 12.3 இன்ச்சில் ஓட்டுனரின் திரை அமைப்பு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் ஸ்டேரிங் சக்கரம், முன்புறம் மற்றும் பின்புற கதவுகளில் ஆஷ்ட்ராய்ஸ் மற்றும் ப்ரீமியம் சவுண்ட் ஆடியோ உள்ளிட்டவற்றுடன் அறிமுகமாகும் என தெரிகிறது.

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

மற்ற தொழிற்நுட்ப வசதிகளாக முன்புறம் மற்றும் பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்ஸ், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இபிஎஸ், ஐசோஃபிக்ஸ் குழந்தைக்களுக்கான இருக்கை ஆங்கர், ரிமோட் கண்ட்ரோல் மூலம் எரிபொருள் டேங்கின் மூடியை திறக்கும் வசதி மற்றும் பனோராமிக் சன்ரூஃப் போன்றவற்றை பெறவுள்ளது.

Most Read:ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான புதிய அறிமுக கார்கள் இவைதான்..!

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

எக்ஸ்சி60 மாடலின் தற்போதைய தலைமுறை கார் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.52.90 லட்சத்தில் இருந்து ரூ.59.90 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த கார் ப்ரீமியம் தரத்திற்கு அப்டேட் ஆகவுள்ளதால் இந்த விலைகளில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை காத்திருப்பது சிறந்தது.

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

அறிமுகத்திற்கு பின்னர் இந்த புதிய 2020 எக்ஸ்சி60 மாடல் ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்3, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடவுள்ளது. வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 மாடல் மட்டுமில்லாமல் சுமார் 1.4 கோடி விலையில் எக்ஸ்சி90 மாடலையும் சில மாதங்களுக்கு இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த சொகுசு கார் குறித்த விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வால்வோ எக்ஸ்சி60 பிஎஸ்6 மாடல் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

உலக சந்தையில் கார்களின் தயாரிப்பில் சிறந்து விளங்கும் வால்வோ நிறுவனம் தனது தயாரிப்பு மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய சிறிது போராடி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் தான் பெருன்மான்மையான இந்திய மாடல்கள் அனைத்திற்கும் அவ்வப்போது சலுகைகளை அறிவித்து வருகிறது.

கார்களின் டிசைனிற்கு பெயர் போன வால்வோவில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள எக்ஸ்சி60 மாடலில் என்னென்ன புதிய டிசைன்கள் வழங்கப்படவுள்ளன என்பதை அறிய அறிமுக தேதி வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Spy Pics: Volvo XC60 BS6 Model Spotted Testing For The First Time In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X