Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 4 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 5 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் இன்னும் ஒன்றுகூட இல்லை! ஆனா உலகளவில் 2வது எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகும் வால்வோ
வால்வோ நிறுவனம் அதன் இரண்டாவது எலக்ட்ரிக் காரை உலகளவில் வருகிற மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் வேகமாக சாய்ந்துவரும் நிறுவனங்களுள் வால்வோவும் ஒன்று. இனி வருடத்திற்கு ஒரு எலக்ட்ரிக் காரையாவது விற்பனைக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் வால்வோ உள்ளது.

இதன் மூலமாக உலகளவில் கார்களின் விற்பனையில் பாதியை எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட கார்களில் இருந்து பெற வேண்டும் என்பதை இந்த நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில்தான் ஒன்று கூட இதுவரை அறிமுகமாகவில்லை.

ஆனால் இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்குதான், 2021ன் மத்தியில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற வால்வோவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார் நம் நாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. எக்ஸ்சி40 க்ராஸ்ஓவர் காரை போல் அதன் எலக்ட்ரிக் வெர்சனும் அதே CMA (காம்பெக்ட் மாடுலர் கட்டமைப்பு) ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வால்வோவின் இரண்டாவது எலக்ட்ரிக் காரை பற்றிய சிறிய தகவல் கூட தற்போதைக்கு இல்லை. ஆனால் இந்த கார் எக்ஸ்சி40 ரீசார்ஜ் உடன் ஒப்பிடும்போது அதிகளவில் நெறிப்படுத்தப்பட்ட லைன்கள் உடன் உருவாக்கப்பட்டிருக்கும் என்று வால்வோ கார்ஸின் தலைவர் ஹக்கன் சாமுவேல்சன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தோற்றத்தில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் அடுத்த நிலையில் இருக்கும் என்று கூறிய அவர், இது வி40 ஹேட்ச்பேக் காரின் மாற்றாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். காரை பற்றிய விபரங்கள் அதன் உலகளாவிய காட்சியின்போதே வெளியிடப்படும்.

இனி வரும் மாடல்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வகையில் மிகவும் ப்ரீமியம் தரத்தில் தயாரிக்கவே வால்வோ திட்டமிட்டிருப்பது ஹக்கன் சாமுவேல்சனின் பேட்டியில் இருந்து தெரிய வருகிறது.

கான்செப்ட் 40.2 மாடலின் அடிப்படையில் இந்த புதிய இவி கார் இருக்குமா என்று பார்த்தால், அந்த கான்செப்ட்டில் ஏற்கனவே போலெஸ்டர் 2 2020 மார்ச் மாதத்தில் இருந்து தயாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

நமக்கு தெரிந்தவரையில் போலெஸ்டர் 2-வின் மலிவான வெர்சனாக இந்த வால்வோ கார் வெளிவரலாம். வால்வோவின் இந்த புதிய எலக்ட்ரிக் காரின் ட்ரைவ் ரேஞ்ச் மற்றும் பேட்டரியின் திறன் உள்ளிட்டவற்றை அறிய இப்போதே ஆர்வமாக உள்ளது.