மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

மேற்கு வங்க மாநில மின்சார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

காற்று மாசுபாடு பிரச்னை மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றை குறைப்பதற்காக, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

இதில், கர்நாடகா, டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை. தமிழக அரசும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளது. இந்த வரிசையில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநில அரசு தற்போது 5 மின்சார வாகனங்களை கொள்முதல் செய்துள்ளது. மின்சார துறை அமைச்சர் சோபான்டெப் சாட்டோபாத்யாய், தலைமை செயலாளர் ராஜிவ் சின்ஹா, உள்துறை செயலாளர் அலப்பன் பன்டோபாத்யாய் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளின் அலுவல் ரீதியிலான பயன்பாட்டிற்காக இந்த 5 மின்சார வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''மேற்கு வங்க மாநில அரசின் இந்த நடவடிக்கை மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னை குறையும். அத்துடன் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்ற விழிப்புணர்வும் மேற்கு வங்க மாநில பொதுமக்கள் மத்தியில் உருவாக்கப்படும்'' என்றனர்.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

இதுகுறித்து மின்சார துறை அமைச்சர் சோபான்டெப் சாட்டோபாத்யாய் கூறுகையில், ''காற்று மாசுபாடு பிரச்னைக்கு எதிராக உலகம் போரிட்டு வரும் நிலையில் எடுக்கப்பட்டுள்ள அருமையான நடவடிக்கை இது. இன்று முதல் நாங்கள் ஐந்து மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக இவை இருக்கும்'' என்றார்.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

இந்த மின்சார வாகனங்கள் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் என்றும், அத்துடன் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Limited) நிறுவனத்திடம் இருந்து, இந்த 5 மின்சார வாகனங்களும் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

இஇஎஸ்எல் நிறுவனத்திடம் இருந்து மேற்கு வங்க மாநில அரசு மின்சார பயணிகள் கார்களை கொள்முதல் செய்திருப்பது இதுவே முதல் முறை எனவும் அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் வரும் காலங்களில் மேற்கு வங்க மாநில அரசு கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகனங்களுக்கு மாறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மம்தா அரசு அதிரடி... மின் துறை அமைச்சர், முக்கிய அதிகாரிகளுக்கு புதிய கார்... எல்லாம் ஒரு காரணமாதான்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை சார்ந்திருப்பததை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. கொல்கத்தா மற்றும் இதர முக்கிய நகரங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
West Bengal Government Procures 5 Electric Cars From EESL. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X