உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

2021 ராம் டிஆர்எக்ஸ் பிக்அப் ட்ரக்கின் முன்பதிவு துவங்கப்பட்ட 3 மணிநேரங்களில் 702 யூனிட்களை கடந்து கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

அமெரிக்கர்களையும் பிக்அப் ட்ரக் வாகனங்களையும் பிரிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் உலகிலேயே ஆற்றல்மிக்க வாகனங்கள் இந்த பிரிவில் தான் உள்ளன. இந்த நிலையில் தான் 2021 ராம் டிஆர்எக்ஸ் பிக்அப் ட்ரக்கின் முன்பதிவு கடந்த 18ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது.

உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

நாம் எதிர்பார்த்ததை போல வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே முன்பதிவு துவங்கப்பட்ட 3 மணிநேரங்களில் 702 யூனிட்களை எட்டிவிட்டது. சந்தையில் இந்த பிக்அப் ட்ரக்கின் விலை 90 ஆயிரம் டாலர்களில் (ரூ.67.4 லட்சம்) இருந்து 1 லட்சம் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.75 லட்சம்) வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

இது நம் இந்திய ரூபாய் மதிப்பில் மலிவானது கிடையாது தான், ஆனால் இதன் 2021 லிமிடேட் எடிசன் இத்தகைய விலைகளை நியாயப்படுத்தும் வகையில் உலகின் அதிக ஆற்றல்கொண்ட பிக்அப் ட்ரக் வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரக் வாகனத்தில் 6.2 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

அதிகப்பட்சமாக சுமார் 692 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த வி8 என்ஜின் தான் புகழ்பெற்ற டோட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி ஹெல்கட், தி ராம் 1500 ட்ரக் வாகனங்களிலும் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றை விடவும் இந்த என்ஜினால் இந்த 2021 லிமிடேட் எடிசனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற விதத்திலும், குதித்தலின்போது சிறப்பாக செயல்படும் வகையிலும் இந்த லிமிடேட் எடிசன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் எத்தகைய சாலையிலும் இந்த பிக்அப் ட்ரக் சுமார் 160 kmph வேகத்தில் செல்லும் என ராம் நிறுவனம் உறுதியாக கூறுகிறது.

உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

இதன் 35 இன்ச் எல்லா சாலைகளுக்கும் ஏற்ற டயர் வாகனத்திற்கு 11.8 இன்ச்கள் கிரவுண்ட் கிளியரென்ஸை வழங்குகிறது. இதுமட்டுமின்றி தார் சாலையில் 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை அடைய வெறும் 4.5 வினாடிகளை எடுத்துக்கொள்ளும் இதன் திறனும் தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் டிஆர்எக்ஸ் வாகனங்களுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று கொடுகின்றன.

உலகின் ஆற்றல்மிக்க பிக்அப் ட்ரக்... 2021 ராம் டிஆர்எக்ஸ்... போட்டிப்போட்டு வாங்கும் அமெரிக்கர்கள்...

சுமார் 594 கிலோ வரையிலான சுமைகளை இந்த டிஆர்எக்ஸ் வாகனத்தால் எடுத்து செல்ல முடியும். அதேநேரம் 3.5 டன் எடை கொண்ட வாகனத்தை இழுத்து செல்ல முடியும். இத்தகைய அப்கிரேட்கள் அனைத்தும் புதிய டிஆர்எக்ஸ்-ற்கு கொடுப்பதற்கு ஒரே காரணம் தான், ஃபோர்டின் ராப்டார் மிக விரைவில் என்ஜின் அப்கிரேடை பெறவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Gone in three hours: 702 units of world's most powerful pickup sold out (2021 RAM 1500 TRX)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X