வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு?

தானியங்கி வாலட் பார்க்கிங் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான போஷ் உடன் இணைந்து புரட்சிகர வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றது. அந்தவகையில், இவ்விரு நிறுவனங்களும் இணைந்து வாகனங்களுக்கான புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த தொழில்நுட்பம் கார்களை தானாகவே வாலட் பார்க்கிங் செய்ய உதவும்.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

இதற்காக அப்கோவா எனும் பார்க்கிங் ஆபரேட்டருடன் பென்ஸ்-போஷ் கூட்டணி வைத்திருக்கின்றது. இந்த நிறுவனங்கள் இணைந்தே மெர்சிடிஸ் பென்ஸ் காரை தானாக பார்க்கிங் செய்யும் தொழில்நுட்பத்தை பார்க்கிங் ஏரியாவில் நிறுவ இருக்கின்றன.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

முதல்கட்டமாக ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் விமான நிலையத்தில் இந்த தானியங்கி பார்க்கிங் வாலட் நிறுவப்பட இருக்கின்றன. கட்டண திட்டத்தின் அடிப்படையில் இந்த சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தானியங்கி வாலட் பார்க்கிங் எப்படி செயல்படும் என்பதை விளக்கும் வீடியோவை பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

தானியங்கி பார்க்கிங் செயல்பாட்டிற்காக பென்ஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்றான எஸ்-கிளாஸ் செடானைப் பயன்படுத்தியுள்ளது. விரைவில் புதிய எஸ்-கிளாஸ் ரக கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத் தேர்வின் அடிப்படையில் 'இன்டலிஜென்ட் பார்க் பைலட்' தொழில்நுட்பம் வசதி வழங்கப்பட இருக்கின்றது. இது தானியங்கி வாலட் பார்க்கிங்கிற்கு உதவியாக இருக்கும்.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

அதாவது, இந்த தொழில்நுட்பம் செல்போன் வாயிலாக கட்டளைகளை ஏற்க உதவும். மிகத் துள்ளியமாகக் கூற வேண்டுமானால், செல்போன் மென்பொருளைக் கொண்டு காரைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறுக் கட்டுப்படுத்தப்படும் கார், தானியங்கி வாலட் பார்க்கிங்கில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தானாகவே காரைக் கொண்டு போய் சேர்க்கும்.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

இந்த சேவைக்கான கட்டணம், செயல்முறை பற்றிய சோதனைகளை அப்கோவா தற்போது மேற்கொண்டு வருகின்றது. இதன், டிஜிட்டல் மொபிலிட்டி பிளாட்பாரத்தின் வாயிலாகவே மெர்சிடிஸ் பென்ஸ் இந்த தானியங்கி வாலட் பார்க்கிங் சேவையை வழங்க இருக்கின்றது.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது?

கேமிராக்களின் பார்வையின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் இயங்க இருக்கின்றது. அதாவது, கேமிராவில் பதிவாகும் காட்சிகள் லோக்கல் சேவையகத்திற்கு (சர்வருக்கு) அனுப்பி வைக்கப்படும். அது, தடை மற்றும் காலியிடம் ஆகியவற்றைக் கண்டறிந்து கார் செல்ல வேண்டிய வழித் தடத்தை காண்பிக்கும்.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

இந்த செயல் மிக அதிக வேகத்தில் நடைபெறும் என்பதால் எந்தவொரு தங்கு தடையுமின்றி கார் தொடர்ச்சியாக நகர்ந்துக் கொண்டே இருக்கும். முன்னதாக இதுபோன்ற செயலுக்கு லிடார் (Light Detection and Ranging) எனும் தொழில்நுட்பத்தையே போஷ் பயன்படுத்தி வந்தது. ஆனால், இதனை தற்போது போஷ் தவிர்த்துள்ளது. இதற்கு பதிலாகவே கேமிராக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

தானியங்கி வாலட் பார்க்கிங்கிற்கென தனியிடம் ஒதுக்கப்படும். அது லோக்கல் சர்வர்களில் தானாகவே பதிவுச் செய்யப்படும். எனவே, தானியங்கி வாலட் பார்க்கிங்கைப் பயன்படுத்த நினைக்கும் நபர், செல்போன் செயலி வாயிலாக சில செயல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு, அனுமதி வழங்கிய பின்னர் தானியங்கி வாலட் பார்க்கிங் சர்வர், ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடத்தில் காலியிடம் இருக்கிறதா என ஆராயும்.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

அவ்வாறு, காலியிடம் இருப்பின், அந்த இடத்திற்கு வாகனத்தை நகர்த்திச் செல்லும். இதற்கு ஓட்டுநர் தேவையில்லை. 'இன்டலிஜென்ட் பார்க் பைலட்' தொழில்நுட்ப வசதி இருந்தால் போதும். இதைக் கொண்டு காரை தானாக கன்ட்ரோல் செய்து, உரிய பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தும். வெற்றிகரமாக கார் நிறுத்தப்பட்ட பின், இதுகுறித்த தகவல் நோடிஃபிகேஷன் வாயிலாக உரிமைாயளருக்கு சென்று சேரும்.

வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு தெரியுமா?

பின்னர், அதன் உரிமையாளர் எந்த இடத்தில் இறங்கினாரோ, அதே இடத்தில் வந்து நின்ற பின்னர், அவர் காத்திருப்பது குறித்த தகவலையும் லோக்கல் சர்வர்கள் வாயிலாக காருக்கு அனுப்பப்படும். இதையடுத்து, உரிமையாளரை எங்கு விட்டுச் சென்றதோ அந்த இடத்திற்கு கார் நகர்ந்து வந்து அவரைப் பிக் செய்யும். இந்த சிறப்பு வசதியையே அப்கோவா நிறுவனத்துடன் இணைந்து பென்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. இதுபோன்று வாலட் பார்க்கிங் தானியங்கி வசதி அறிமுகமாவது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.

Most Read Articles

English summary
World’s First Automatic Valet Parking. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X