லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

டீசல் எஞ்ஜின் கொண்ட மஹிந்திரா தார் கார் லிட்டர் டீசலுக்கு எவ்ளோ மைலேஜ் தருகிறது என்ற ஆய்வை இளைஞர் ஒருவர் செய்திருக்கின்றார். அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இந்தியர்களின் ஆர்வத்தை பெருமளவில் ஈர்த்து வந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கடந்த அக்டோபர் மாதம் விற்பனைக்கு வந்தது. இக்காருக்கு எதிர்பார்த்திராத வகையில் அமோகமான வரவேற்பு தற்போது இந்தியாவில் கிடைத்து வருகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் புதிய வரலாற்றைப் படைக்கின்ற வகையில் அக்கார் சிறப்பான விற்பனையைப் பெற்று வருகின்றது.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இதனால், இக்காருக்கான காத்திருப்பு காலம் 9 மாதங்களுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்தநிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக தார் காரின் உற்பத்தி எண்ணிக்கைய அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் மஹிந்திரா இறங்கியிருக்கின்றது.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

புதிய மஹிந்திரா தார், ஆஃப்ரோடு பயண பிரியர்களை மட்டுமின்றி தினசரி பயனர்கள் மற்றும் குடும்ப பயண பிரியர்களையும் அதிகளவில் கவர்ந்து வருகின்றது. இந்த நிலையில், டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் தார் எஸ்யூவியை, அதன் மைலேஜ் குறித்த ஆய்வு செய்கின்ற வகையில் ஓர் பரிசோதனையைக் மேற்கொண்டிருக்கின்றார்.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இந்த ஆய்வில் கிடைத்த ஆச்சரிய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். மேலும், இந்த நிகழ்வுகுறித்து டிசிவி யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கும் வீடியோவையும் இதில் காணலாம். முதலில் கார் பற்றிய தகவலைப் பார்க்கலாம். மைலேஜ் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டது தார் காரின் சாஃப்ட் டாப் கன்வர்டபிள் வெர்ஷன் ஆகும்.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இதனை தினசரி அலுவலக பயன்பாட்டிற்காகவே இளைஞர் (மைலேஜ் பரிசோதனையை மேற்கொண்டவர்) வாங்கியிருக்கின்றார். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே காரின் மைலேஜ் மற்றும் எரிபொருள் பயன்பாடு ஆய்வினை அவர் மேற்கொண்டிருக்கின்றார்.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இதற்காக, எரிபொருள் தொட்டி நிரம்பும் வரை டீசலை அவர் நிரப்பியிருக்கின்றார். அதாவது, எரிபொருளை நிரப்பும் கருவி (கன்), எரிபொருள் தொட்டிக்குள் முழுமையாக இருக்கின்றபோது தானாக வெளியேற்றத்தை நிறுத்துகின்ற வரை டீசலை நிரப்பினார். இதன்படி, சுமார் 46 லிட்டர் வரை எரிபொருள் நிரப்பட்டதாகக் கூறப்படுகின்று.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இதையடுத்து தார் காரைக் கொண்டு அந்த இளைஞர் ஹாயாக ஊர் சுற்ற ஆரம்பித்திருக்கின்றனர். இந்த பயணத்தின்போது நெடுஞ்சாலை, டிராஃபிக் நிறைந்த நகர சாலைகள் மற்றும் ஆஃப்-ரோடு சாலைகள் சிலவற்றிலும் அவர் பயணத்தார். அவ்வாறு 524 கிமீ தூரம் வரை அவர் பயணித்திருக்கின்றார்.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இந்த நிலையிலேயே இன்னும் 80+ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும் என ப்யூவல் இன்டிகேட்டர் எச்சரித்திருக்கின்றது. இதையடுத்து, மீண்டும் டேங்க் நிரம்புமளவிற்கு டீசலை ஏற்றியிருக்கின்றார். இதை வைத்து பார்க்கையில் மஹிந்திரா தார் கார் 11.30 கிமீ எனும் மைலேஜே ஒரு லிட்டர் டீசலுக்கு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இது புதிய கார் என்பதாலும், முக்கியமாக ஆஃப்-ரோடுகளில் பயணித்ததன் காரணத்தினாலும் இத்தகைய குறைந்தளவு மைலேஜை தார் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், இந்த மைலேஜ் திறன் பலருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒரு சேர வழங்கியிருக்கின்றது.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

அதேசமயம், இளைஞர் பயன்படுத்தியது டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் என்பதால் பலருக்கு இந்த தகவல் எந்தவிதமான ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளவிக்கவில்லை. இத்துடன், அனைத்து சாலைகளிலும் மஹிந்திர தார் பயணித்திருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் 11 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை தார் வழங்கியிருப்பது வரவேற்கதக்கதே என்கின்றனர்.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

இதுவே மேனுவல் கியர்பாக்ஸைப் பயன்படுத்தி கார் இயக்கப்பட்டிருந்தால் கூடுதல் மைலேஜைப் பெற்றிருக்கும் என கூறுகின்றனர். மேலும், ஆஃப்ரோடு அல்லாத சாலைகளில் மட்டுமே பயணித்திருந்தாலும் கூடுதல் மைலேஜை அந்த இளைஞரால் பெற்றிருக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.

மஹிந்திரா தார் இருவிதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒன்று 2.0 லிட்டர் டர்போசார்ஜட் எம்ஸ்டால்லியன் பெட்ரோல் எஞ்ஜினிலும், மற்றொன்று 2.2 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 150 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

லிட்டருக்கு எவ்ளோ தருகிறது டீசல் எஞ்ஜின் மஹிந்திரா தார்... டெஸ்ட் செய்த நம்மில் ஒருவர்... ஆச்சர்யமான விடை உள்ளே!

டீசல் எஞ்ஜின் 130 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இக்கார் பாதுகாப்பு தரத்திலும் நல்ல ரேட்டிங்கைப் பெற்ற என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கார் குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவலின்படி பாதுகாப்பில் 4 நட்சத்திரங்கள் பெற்ற கார் ஆகும்.

Most Read Articles

English summary
Young Man Made Mahindra Thar Diesel Automatic Mileage Test. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X