டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

டெஸ்லா சைபர்டிரக்கை எவ்வளவு பேர் முன்பதிவு செய்துள்ளனர்? என்ற விபரம் வெளியாகி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

டெஸ்லா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சைபர்டிரக் வாகனத்தை முதல் முறையாக காட்சிக்கு வைத்தது. அதன் பிறகுதான் கொரோனா வைரஸ் பிரச்னை உலகை ஆட்டி படைக்க தொடங்கியது. இருந்தாலும் டெஸ்லா சைபர்டிரக் மீதான மோகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறையவில்லை. இதை நிரூபிக்கும் வகையிலான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

ஆம், டெஸ்லா சைபர்டிரக்கிற்கு தற்போது வரை 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என்பது உறுதியாக தெரியாத நிலையிலேயே, இத்தனை பேர் முன்பதிவு செய்திருப்பது மிகப்பெரிய விஷயம்தான்.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

டெஸ்லா நிறுவனம் சைபர்டிரக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை நடப்பாண்டில் தொடங்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னையால் வினியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, 2022ம் ஆண்டில்தான் டெலிவிரி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

டெஸ்லா சைபர்டிரக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், முன்பதிவு தொகை மிகவும் குறைவு என்பது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஆம், வெறும் 100 அமெரிக்க டாலர்களை செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் டெஸ்லா சைபர்டிரக்கை முன்பதிவு செய்ய முடியும்.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

இந்திய மதிப்பில் பார்த்தால், இது சுமார் 7,200 ரூபாய்தான். அதுவும் இந்த பணத்தை திரும்ப பெற முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்பதிவை ரத்து செய்யும்பட்சத்தில், இந்த தொகை திரும்ப கிடைத்து விடும். இதன் காரணமாகவே டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என்பது தெரியாத நிலையிலும், பலர் டெஸ்லா சைபர்டிரக்கை ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

சைபர் டிரக் முதன் முதலில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு வார காலத்திற்கு உள்ளாகவே சுமார் 2.50 லட்சம் பேர் அதனை முன்பதிவு செய்து விட்டதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் முன்பு கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். தற்போது முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

முன்பதிவு செய்வது மிகவும் எளிமையான விஷயம். ஆனால் உற்பத்தி செய்வது மிகவும் கடினமான விஷயம். தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை, உதிரிபாகங்கள் வினியோக சங்கிலியில் பாதிப்பு என உற்பத்தியில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இதை எல்லாம் டெஸ்லா நிறுவனம் எப்படி சமாளிக்க போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்க கடும் போட்டி... இத்தனை லட்சம் பேருக்கு எப்படி டெலிவரி கொடுக்க போறாங்கன்னு தெரியல...

இதற்கிடையே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எப்போது தனது வர்த்தகத்தை தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் நடப்பாண்டின் மத்தியில் டெஸ்லா தனது முதல் காரை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் டெஸ்லா கார் அறிமுகம் தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
10 Lakh Reservations For Tesla Cybertruck: Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, May 26, 2021, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X