டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான எம்யுவி காரான சுமோவை 1994ல் சந்தையில் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்த சுமோ கார்களின் விற்பனையில் டாடா நிறுவனம் 1 லட்சம் என்ற மைல்கல்லை அறிமுகம் செய்த மூன்றே வருடங்களில் அடைந்திருந்தது.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

இருப்பினும் போட்டி அதிகமாகவே கடந்த 2019ல் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை நிறுத்தியது. இதனால் இப்போதும் சிலர் டாடா சுமோ கார்களை வைத்துள்ளனர். ஆனால் இந்த செய்தியில் நாம் பார்க்க போவது, 15 வருடங்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட சுமோ காரை பற்றியதாகும்.

Image Courtesy: Rohit Mehta Sai Auto Accessories

ரோஹித் மெஹ்தா சாய் ஆட்டோ ஆக்ஸஸரீகள் என்ற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேல் உள்ள வீடியோவில் மாடிஃபை செய்யப்பட்ட அந்த 15 வருட பழமையான சுமோவை பார்க்கலாம். ஆனால் உங்கள் கண்களுக்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை கொண்ட சுமோ கார் தெரிவதற்கு தான் வாய்ப்புண்டு.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

காரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது இந்த வீடியோவில் தெளிவாக விளக்கி காட்டப்பட்டுள்ளது. காரின் முன்பக்கத்தில் வழக்கமான ஹலோஜன் ஹெட்லேம்ப்களுக்கு மாற்றாக எச்ஐடி யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

அதேபோல் ஹெட்லேம்ப் அமைப்பில் கூடுதலாக மோதிரம் வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பம்பர் ஆரம்பத்தில் இருந்தே பளபளப்பான கருப்பு நிறத்தில் இருந்துள்ளது. பம்பரில் இரு ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

பொனெட் மூடியில் சிவப்பு & கருப்பு நிற ஸ்டிக்கர்களை பார்க்கலாம். சுமோவின் பக்கவாட்டில் வழங்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள் புதியவைகளாக மாற்றப்பட்டுள்ளது. 15 இன்ச் சக்கரங்களில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் கூடுதல் இரட்டை-நிறங்களில் சக்கர மூடிகள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

இதன் காரணமாக நமக்கு அலாய் சக்கரங்கள் போன்று தோன்றுகிறது. காரின் பக்கவாட்டில் புதிய படிக்கட்டு உடன் கதவுகளின் அடிப்பகுதி கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பகுதியை போல் பின்பகுதியிலும் சிவப்பு & கருப்பு நிற ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

பின்பக்கத்தில் டெயில்லைட்கள் அப்படியே தொடரப்பட்டாலும், அவற்றில் ஸ்மோக்டு எஃபெக்ட் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சுமோ காரின் உரிமையாளர் பின்பக்கத்தில் ஸ்பாய்லரையும் பொருத்தியுள்ளார்.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

இவை எல்லாம் சும்மா ட்ரைலர் தான், முக்கிய மாடிஃபிகேஷன் மாற்றங்கள் அனைத்தும் காரின் உட்புறத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளன. கதவு கைப்பிடிகளில் இருந்து துவங்கலாம். உட்புற கதவு கைப்பிடிகள் லெதர் பேடிங்-ஐ கொண்டுள்ளன.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

இந்த பகுதி, டேஸ்போர்டின் மைய கன்சோல் பகுதி மற்றும் கேபினின் தரையிலும் கூட விளக்குகளை பார்க்க முடிகிறது. இருக்கைகள் கருப்பு & பழுப்பு நிறங்களில் கவரை பெற்றுள்ளன. ஓட்டுனருக்கு கை வைக்கும் பகுதியையும், மைய கன்சோல் & ஸ்டேரிங் சக்கரத்தில் மர துண்டுகளையும் கஸ்டமைஸ்ட் செய்தவர்கள் பொருத்தியுள்ளனர்.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

டேஸ்போர்டிற்கு மேலே நேர்த்தியாக பொருத்தப்பட்ட தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பார்க்கலாம். ஆண்ட்ராய்டு சிஸ்டமான இதன் மூலம் ஆஃப்லைன் வரைபடங்கள், படங்கள் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

கேபினின் முன் மற்றும் பின்பகுதிகளில் ஸ்பீக்கர்கள் உள்ளன. வெப்பத்தை அனுமதிக்காத கண்ணாடி முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதற்கு இதுவே உதாரணம்!! இன்னமும் இயங்கும் 15 வருட பழமையான டாடா சுமோ!

இதற்கு ஆன மொத்த செலவு குறித்த எந்த விபரத்தையும் இந்த மாடிஃபை சுமோ காரின் உரிமையாளர் தெரிவிக்கவில்லை. இவ்வாறான மாடிஃபிகேஷன் தேர்வுகள் ரூ.75,000ல் இருந்து ரூ.1.25 லட்சம் வரையிலான விலைகளில் உள்ளன என மட்டுமே கூறியுள்ளார்.

Most Read Articles

English summary
15-year old Tata Sumo MUV beautifully resto-modded. Read All Details In Tamil.
Story first published: Sunday, May 9, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X