16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

சுமார் 16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ ஜிங் கார் ஒன்று மீண்டும் புதிய தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

இரண்டாவது மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இந்திய சந்தையில் விளங்கிவரும் ஹூண்டாய் மோட்டார்ஸின் வளர்ச்சிக்கு பல கார் மாடல்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளன. இதில் சாண்ட்ரோவின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

சாண்ட்ரோவின் விற்பனை இடையில் நிறுத்தப்பட்டது. அதன்பின் புதிய தோற்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் சாண்ட்ரோ ஜிங் விற்பனை செய்யப்படுவதில்லை என்றாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இன்றளவும் சாண்ட்ரோ ஜிங் கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

அவர்களில் ஒருவர் தான் தனது பதினாறு வருட பழமையான சாண்ட்ரோ ஜிங் காரை மீண்டும் விற்பனையில் இருந்த சமயத்தில் கொண்டிருந்த தோற்றத்திற்கு கொண்டுவந்துள்ளார். இது தொடர்பாக ப்ரோடோமோட்டிவ் என்ற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ இதோ உங்களுக்காக...

Image Courtesy: BROTOMOTIV

மெக்கானிக் கடைக்கு வருவதற்கு முன்னர் கார் எத்தகைய தோற்றத்தில் இருந்தது என்பதும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் காருடன் மிக நெருக்கமாக பிணைப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

இதனால் தான் அவர் புதிய கார் வாங்காமல் இந்த சாண்ட்ரோ காரையே மீண்டும் புதிய தோற்றத்திற்கு மாற்றியுள்ளார். 16 வருடங்களான போதிலும் கார் பெரிய அளவில் விபத்துகளில் சிக்காமல் இருந்ததும், மீண்டும் புதிய தோற்றத்திற்கு மாற்ற இவர்களுக்கு எளிமையாக இருந்துள்ளது.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

இதில் இருந்து இந்த சாண்ட்ரோ ஜிங் காரின் உரிமையாளர் எவ்வாறு தனது காரை பராமரித்து வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. காரில் விழுந்திருந்த சில குழிகளை பெயிண்ட்டை நீக்கி சரி செய்துள்ளனர்.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

துருப்பிடித்திருந்த பகுதிகளில் உலோக தகடுகள் நெருப்பின் மூலம் ஒட்ட வைக்கப்பட்டுள்ளன. இந்த சரிபார்ப்பு வேலைகள் அனைத்து முடிந்த பின்பு பிரைமர் ஒரு கோட் காரின் மேற்புறத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது மீண்டும் துருப்பிடித்தலை தவிர்க்கும்.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

என்ஜின் பகுதியில் சில இணைப்பு வேலைகள் தேவைப்பட்டுள்ளன. இங்கேயும் துருப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. முன்பக்க விண்ட்ஷீல்டு காரில் இருந்து நீக்கப்பட்டு வைபர்களில் துருப்பிடித்திருந்த பகுதிகள் சரி செய்யப்பட்டுள்ளன.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

மோட்டார் உடன் வைபரை இணைக்கும் உலோகம் புதிய ஒன்றின் மூலமாக மாற்றப்பட்டுள்ளது. காரில் வழங்கப்பட்டு இருந்த பேட்டரி பாக்ஸும் துருப்பிடித்து இருந்துள்ளது. ஹெட்லைட்கள் & டெயில்லைட்களின் உட்பக்கம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பளபளப்பாக மின்னுகின்றன.

16 வருடங்கள் பழமையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்... மீண்டும் புதிய தோற்றத்தில்!!

பிரைமர் வேலைகள் முடிந்தவுடன் பொனெட், கதவுகள், பின்பக்க பூட், கதவு கைப்பிடிகள் என தனித்தனியாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நமக்கு தற்போதைய மாடர்ன் கார்களை பார்க்கும் உணர்வு இந்த ஹூண்டாய் சாண்ட்ரோ ஜிங் காரை பார்க்கும்போது ஏற்படுகிறது.

Most Read Articles

English summary
16 year old Hyundai Santro Xing beautifully restored. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X