மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

உலகளவில் பெண்களுக்கு பிடித்தமான கார்கள் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர்கள் தினம் உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெண்களைப் போற்றும் விதமாக மகளிர்களுக்கான பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்தன. குறிப்பாக, தள்ளுபடி, சிறப்பு ஆஃபர் என பெண்களைக் கவரக்கூடிய தரமான அறிவிப்புகளை நிறுவனங்கள் அறிவித்திருத்தன.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

இந்த சிறப்பு சலுகைகளை இந்த வாரம் இறுதி நாள் வரை வழங்க இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. இம்மாதிரியன சூழ்நிலையில், 38 நாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ பத்திரிக்கையாளர்கள் சேர்ந்து பெண்களின் மன நிலைக்கு ஏற்ற கார் எது என்றும், அதிகம் பெண்கள் பயன்படுத்தக் கூடிய கார் மாடல் எது என்பது பற்றிய தகவலையும் வெளியிட்டிருக்கின்றனர்.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

2020ம் ஆண்டில் விற்பனையான வாகனங்களின் அடிப்படை தகவலைக் கொண்டே இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த 50 பெண் பத்திரிக்கையாளர்களும் வெவ்வேறு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்களே மகளிர் தினமான மார்ச் 8 அன்று பெண்களின் விருப்பமிகு கார்கள் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

9 பிரிவுகளின் அடிப்படையில் ஜூரிக்கள் கார்களை தேர்வு செய்திருக்கின்றனர். நகர்ப்புற பயன்பாட்டில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் காராக பியூஜியோட் 208 கார் இருக்கின்றது. இந்த காரை கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டாரா் ஷோவிலேயே நிறுவனம் முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

இதனைத் தொடர்ந்து, இந்தியா போன்ற சில நாடுகளைத் தவிர்த்து உலக நாடுகள் பலவற்றில் இக்காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அவ்வாறு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகள் பலவற்றில் அதிகம் பெண்களிடத்திலேயே இக்கார் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

பியுஜியோட் 208 ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொடர்ந்து, 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

இதையடுத்து பெண்கள் அதிகம் விரும்பும் குடும்பத்திற்கான காராக ஸ்கோடா ஆக்டோவியா இருக்கின்றது. இக்காரையே குடும்பத்துடன் பயணிக்க பெண்கள் விரும்புகின்றனர். இந்த காரின் பத்தாம் பதிப்பையே தயாரிப்பு நிறுவனம் தற்போது விற்பனைச் செய்து வருகின்றது.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

தொடர்ந்து, எஸ்யூவி கார் பிரிவில் பெண்கள் அதிகம் விரும்பும் காராக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடலும், இதற்கு அடுத்தபடியான இடத்தில் கியா சொரண்டோ காரும் இருக்கின்றது. இதில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் என்பத மீடியம் அளவிலான எஸ்யூவி கார் ஆகும். கியா சொரண்டோ பிரமாண்ட உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார்.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

எலெக்ட்ரிக் காரை பொருத்தவரை ஹோண்டா இ மாடலையே பெண்கள் அதிகம் விரும்புவதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல் தெரிவிக்கின்றது. இதன் மிக சிறிய உருவம் மற்றும் எளிமையான இயக்கும் திறன் உள்ளிட்டவை பெண்களிடம் அதிக வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றது.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

பெண்களின் அதிகம் விருப்பம் கொண்ட சொகுசு காராக லெக்சஸ் நிறுவனத்தின் எல்சி500 மாடல் இருக்கின்றது. இதையடுத்து, ஃபெர்ராரி எஃப்8 ஸ்பைடர் சூப்பர் கார் இருக்கின்றது. இந்த காரே ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில் அதிகம் புகழ்வாய்ந்த கார் மாடலாகும்.

மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

இதுவே ஸ்போர்ட்ஸ் காரை அதிகம் விரும்பும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் மாடலாக இருக்கின்றது. மேலே பார்த்த மாடல்களுக்கு பெண்களின் பேரதாரவு கிடைத்து வருகின்றது. உலகளவில் பெண்கள் இக்கார்களை அதிகம் பயன்படுத்தியும் வருகின்றனர்.

Most Read Articles

English summary
2020 WWCOTY Award Winnig Cars; Here Is Full List. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X