2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுகம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

ஆடி நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் நடப்பு 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் 2021 ஆர்எஸ்5 கார் தொடர்பான டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

இந்த வீடியோவில் புதிய ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் (CBU) இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்போர்ட்பேக் காரின் விலை ரூ.1.5 கோடியில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

அப்டேட் செய்யப்பட்ட ஆடி ஆர்எஸ்5 மாடல் உலகளவில் கடந்த 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்த ஆடி ஸ்போர்ட்பேக் கார் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

அப்டேட் மாற்றங்களாக புதிய ஒற்றை-துண்டு க்ரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆடியின் அடையாள பேட்டர்னில் புதிய எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவற்றுடன் ஆர்எஸ்5 முன்பை காட்டிலும் கூடுதல் கூர்மையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

இந்த ஸ்போர்ட்பேக் காரில் 19 இன்ச்சில் சக்கரங்களை ஆடி நிறுவனம் வழங்குகிறது. இதனை காட்டிலும் பெரியதாக வேண்டுமென்போர்க்காக 20-இன்ச் தேர்வும் வழங்கப்படவுள்ளது. சக்கரங்களுக்கு மேலே சக்கர வளைவுகள் 40மிமீ-இல் நன்கு அகலமானதாக வழங்கப்படுகின்றன.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

உட்புறத்தில் புதிய ஆடி ஆர்எஸ்5 காரில் 12.3 இன்ச்சில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்பாய்லர் பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஆர்எஸ்5 காரில் 2.9 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதனுடன் ஆடியின் குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பு, 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படுகிறது.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

அதிகப்பட்சமாக 444 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் 0-வில் 100kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடலாம். ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும்.

2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு!! மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது!

அதேநேரம் கூடுதல் தொகையை செலுத்தி ஆர்எஸ் தொகுப்பை வாங்கி பொருத்தினால், 280kmph வேகம் வரையில் எட்ட முடியுமாம். அறிமுகத்திற்கு பிறகு ஆடி ஆர்எஸ்5 காருக்கு பிஎம்டபிள்யூ எம்3 மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி63 உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
2021 Audi RS5 India Launch Date Confirmed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X