Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பென்ட்லீயின் 2021 பென்டைகா ஹைப்ரீட் கார்!! வெறும் எலக்ட்ரிக் மோடிலேயே 50கிமீ தூரத்திற்கு இயங்குமாம்..
2021 பென்டைகா ஹைப்ரீட் காரை பற்றிய விபரங்களை பென்ட்லீ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 பென்ட்லீ பென்டைகா ஹைப்ரீட் காரில் மிக முக்கிய அம்சமாக 96 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்ட 3.0 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 443 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டவை. இந்த 2021 பென்டைகாவை வெறும் எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றல் மூலமாக 50 கிமீ தூரம் வரையில் (ஐரோப்பாவில்) இயக்க முடியும் என தயாரிப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் மோட்டாரில் வழங்கப்படும் பேட்டரி முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 21கிமீ தூரம் வரையில் மட்டுமே செயல்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஞ்ச் குறைவு என்பதால்தான் வெறும் எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலின் மூலமாக 50கிமீ தூரம் வரையில் இயங்கும் திறனை வழங்கியுள்ளதாக பென்ட்லீ தெரிவித்துள்ளது.

இதனால் இந்த பென்டைகா ஹைப்ரீட் காரை பொறுத்தவரையில் வி6 என்ஜின் பெரியளவில் எந்த வேலையையும் செய்யாது. வழக்கமான பென்ட்லீ பென்டைகாவை காட்டிலும் அதன் 2021 ஹைப்ரீட் வெர்சன் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

நீங்கள் எதிர்பார்ப்பது போல, ஹைப்ரீட் செயல்திறன் ஆக்ஸலரேட்டர் பெடல் உள்ளிட்ட சில பெஸ்போக் கண்டுபிடிப்புகள் ஓட்டுனர்கள் மின்சாரத்திலிருந்து வி6 சக்தியைத் தேர்வுசெய்ய உதவும் வகையில் இந்த 2021 பென்ட்லீ ஹைப்ரீட் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர்கள் சிறிது ஆற்றலைச் சேமிக்க ஊக்குவிப்பதற்காக ரவுண்டானா அல்லது மெதுவான வேக மண்டலத்தில் செல்லும்போது த்ரோட்டில் பெடல் அதிர்வுறும். எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 135 கி.மீ வேகத்தில் காரை இயங்கக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது.

2021 பென்டேகா ஹைப்ரீடில் மேம்படுத்தப்பட்ட பிரேக்குகள் போன்ற இயந்திர மாற்றங்களையும் பென்ட்லீ நிறுவனம் இணைத்துள்ளது. காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஸ்டாண்டர்ட் ஆப்பிள் கார்ப்ளே உடன் 10.9 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃப்டெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஹாண்ட்கிராஃப்டு டேஸ்போர்டு டிசைன், எட்ஜ்-டூ-எட்ஜ் கிட்ராஃபிக்ஸ், புதிய கட்டமைக்கக்கூடிய டிஜிட்டல் திரை, நாவிகேஷன் உடன் செயற்கைக்கோள் வரைபடங்கள் & இணைய தேடல்கள், பின் இருக்கை பயணிகளுக்கு பெரிய தொடுத்திரை ரிமோட் கண்ட்ரோல் டேப்லெட் உள்ளிட்டவையையும் இந்த 2021 பென்ட்லீ கார் பெற்றுள்ளது.