ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

2021 Ferrari Roma V8 Launched In India | ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் காரை ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

ஃபெராரி நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற கார் மாடல்களில் ரோமா-வும் ஒன்று. இந்த சூப்பர் காரையே நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காரை நிறுவனம் 2019ம் ஆண்டு நவம்பர் மாதமே வெளியீடு செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

ஆனால், இந்தியாவில் இப்போதே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 3.76 கோடி ஆகும். இந்த உச்சபட்ச விலையிலேயே ஃபெராரி ரோமா விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த விலை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

ஃபெராரி ரோமா காரில் ஒருங்கிணைந்த, கிடைமட்டமான எல்இடிஆர்எல்களுடன் கூடிய அடாப்டீவ் எல்இடி ஹெட்லேம்ப், சுறா மூக்கு வடிவிலான முகப்பு பகுதி, குவாட் எல்இடி எல்இடி வால் பகுதி மின் விளக்கு, மூன்று விதமான மோட்களில் இயங்கக் கூடிய பின் பகுதி ஸ்பாய்லர் உள்ளிட்டவை இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

இவையனைத்தும் காரின் திறனையும், கவர்ச்சியையும் கூட்டும் வகையில் அமைந்துள்ளது. காருக்குள் 16 இன்சிலான முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல், கன்சோலின் மையப்பகுதியில் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கான தனி திரை உள்ளிட்டவையும் ஃபெராரி ரோமா சூப்பர் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

ஃபெராரி ரோமா காரில் 3.9 லிட்டர் டர்போசார்ஜட் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 612 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறனை 8 ஸ்பீடு டிசிடி வேகக்கட்டுப்பாடு கருவியுடன் இணைந்து செயல்பட்டு இந்த எஞ்ஜின் வெளியேற்றுகின்றது.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை வெறும் 3.4 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் திறன் கொண்டது. அதேசமயம், மணிக்கு 200 கிமீ வேகத்தை 9.3 செகண்டுகளிலும் தொட்டுவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும்.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

இத்தகைய அதி வேக சூப்பர் திறன் கொண்ட ரோமா சூப்பர் காரையே ஃபெராரி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ச செய்துள்ளது. இந்த காரின் ஒட்டுமொத்த வீல் பேஸே 2,670 மிமீ ஆகும். இதன் நீளம் 4,656மிமீட்டரிலும், அகலம் 1,974 மிமீட்டர் அளவிலும் உள்ளது.

ரூ. 3.76 கோடி விலையுள்ள ரோமா சூப்பர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக களமிறக்கிய ஃபெராரி!

இந்த காரின் உட்பகுதி சொகுசு வசதிக்கும், தொழில்நுட்ப அம்சங்களாலும் நிறைந்து காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இதில் இருக்கும் உள்ளன. ஆனால், இவற்றைவிட இதன் விலை பல மடங்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
2021 Ferrari Roma V8 Super Car Launched In India: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X