பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

விரைவில் அறிமுகமாகவுள்ள 2021 ஃபோர்ஸ் குர்கா வாகனம் பின்பக்கத்தில் பெற்றுவரவுள்ள கேப்டன் இருக்கைகள் புதிய டீசர் வீடியோவின் மூலமாக வெளிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்ததற்கு எல்லாம் முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை குர்கா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

இந்த ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற்று கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் நிறைவடைந்த போதிலும் தற்போதுவரையில் புதிய ஃபோர்ஸ் குர்கா விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை. மஹாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய குர்கா தொடர்பான சோதனை ஓட்டங்களை கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டுவந்தது.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

அதனை தொடர்ந்து சமீப நாட்களாக இந்த புதிய தலைமுறை ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் தொடர்பான டீசர்களை தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 2021 குர்காவின் உட்புறத்தில் பின் வரிசையில் வழங்கப்பட உள்ள 2 கேப்டன் இருக்கைகள் சற்று மங்கலாக காட்டப்பட்டுள்ளன.

மங்கலாக காட்டப்பட்டு இருப்பினும் பின் வரிசை இருக்கைகளுக்கு தனித்தனியாக ஆர்ம்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இவ்வாறான பிரத்யேக வசதிகளினாலேயே இதனை கேப்டன் இருக்கைகள் என்கிறோம். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய தலைமுறை குர்கா ஆனது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குர்கா மாடலையே ஒத்து காணப்பட உள்ளது.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

இதற்கு முன் நமக்கு கிடைத்திருந்த புதிய குர்கா ஆஃப்-ரோடு எஸ்யூவியின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் இந்த வாகனம் முன்பக்கத்தில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், ஸ்னோர்கில் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை மிக முக்கிய சிறப்பம்சமாக பெற்றுவரவுள்ளதை அறிந்திருந்தோம்.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

ஏற்கனவே கூறியதுதான், புதிய குர்கா தொடர்பான டீசர்களை ஃபோர்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களாக வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட டீசர் படத்தில் வாகனத்தின் முன்பக்கத்தையும், அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு இருந்த டீசர் வீடியோவில் புதிய குர்காவின் பின்பக்கமும் வெளிக்காட்டப்பட்டு இருந்தது.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

கடந்த 2020ஆம் ஆண்டில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் வாகனத்திற்கு போட்டியாக புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலினால் இதன் அறிமுகம் தற்போதுவரையில் தாமதமாகி வருகிறது.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

இன்னும் சில மாதங்களில், இந்த 2021ஆம் வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய குர்கா அதன் முந்தைய தலைமுறையினை காட்டிலும் நன்கு மேம்படுத்தப்பட்ட பரிணாம வளர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன் நமக்கு கிடைத்திருந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது இந்த ஃபோர்ஸ் எஸ்யூவி வாகனம் தனது பெட்டக வடிவத்தை இழக்க போவதில்லை.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

ஒற்றை-ஸ்லாட் க்ரில் உடன் முன்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களை பெற்றுவரும் 2021 குர்கா புதிய பம்பர்கள், ஃபாக் விளக்குகள், இண்டிகேட்டர்களுடன் சிப்பி ஓடு போன்றதான வடிவில் பொனெட் முதலியவற்றையும் ஏற்று வரவுள்ளது. அதேநேரம் இந்த புதிய வாகனத்தை சுற்றிலும் கருப்பு நிற க்ளாடிங்கையும் எதிர்பார்க்கிறோம்.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

அதேபோல் பின்பக்கத்தில் ஸ்பேர் சக்கரத்தையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். பின்பக்கத்தில் 'STOP' விளக்கு நன்கு மேலாக பொருத்தப்பட்டுள்ளதை ஸ்பை படங்களில் பார்க்க முடிந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கேப்டன் இருக்கைகளை காட்டும் டீசர் வீடியோவின் மூலம் 2021 குர்காவின் கேபின் அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளது மீண்டும் உறுதியாகிறது.

பின் வரிசையில் ‘கேப்டன்’ இருக்கைகளை பெறும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! டீசர் வீடியோ வெளியீடு!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய குர்காவில் 2.6 லிட்டர் டீச்ல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட உள்ளது. அத்துடன் குறை விகித கியர்பாக்ஸ் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பையும் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Force Gurkha to get captain seats at the rear.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X