2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

2021 ஃபிகோ ஹேட்ச்பேக் காரை ஃபோர்டு இந்தியா நிறுவனம் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இம்முறை பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஃபிகோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

ஃபோர்டு ஃபிகோவிற்கு பல பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் போட்டியாக உள்ளன. ஆனால் ஃபிகோ எந்த காருக்கும் முக்கியமான போட்டியாக விளங்குவதில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு தான் இந்த ஃபோர்டு காரின் விற்பனை இந்தியாவில் உள்ளது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

ஆனால் 2021 ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரின் மீது அமெரிக்க கார் பிராண்டான ஃபோர்டு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. தற்சமயம் இந்தியாவில் பிரிமீயம் ஹேட்ச்பேக் பிரிவில் மிகுந்த பிரபலமான கார்களாக டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்டவை விளங்குகின்றன.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

இவை இரண்டிலும் குறைந்தப்பட்சம் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷனையாவது பெற முடிகிறது. இதனாலேயே இவற்றிற்கு வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்து வருகின்றனர். இதனை மனதில் வைத்தே ஃபிகோவில் புதியதாக ஆட்டோமேட்டிக் தேர்வை கொண்டுவரும் திட்டத்தில் ஃபோர்டு நிறுவனம் இறங்கியது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

அல்ட்ராஸ் & கிராண்ட் ஐ10 நியோஸ் என்பவை மட்டுமில்லாமல், நிஸான் மேக்னைட் போன்ற சில காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் இந்த ஃபோர்டு ஹேட்ச்பேக் காருக்கு போட்டியாக விளங்குகின்றன. ஆனால் உண்மையில், இவை எல்லாவற்றையும் விட, விலையில், தோற்றத்தில் ஃபோர்டு ஃபிகோவிற்கு நேரடி போட்டி மாடலாக விளங்குவது எதுவென்று பார்த்தால் ஃபோக்ஸ்வேகன் போலோ தான்.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

இந்த இரு ஹேட்ச்பேக் கார்களும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த த்ரில்லிங்கான பயணத்தை வழங்கக்கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டிற்கும் இடையே என்னென்ன ஒற்றுமைகள் உள்ளன? வேற்றுமைகள் என்னென்ன என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

என்ஜின்

ஃபோர்டு ஃபிகோ, ஃபோக்ஸ்வேகன் போலோ இவை இரண்டும் அவற்றின் தோற்றத்தை காட்டிலும், என்ஜினையே ஹைலைட்டாக முன்னுறுத்தி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இவை இரண்டின் என்ஜின்களை ஒப்பிட்டு பார்த்தோமேயானால், ஃபோக்ஸ்வேகன் போலோ ஆற்றல்மிக்கதாக விளங்குகிறது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

ஏனெனில் போலோ ஹேட்ச்பேக் காரில் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஆனால் ஃபிகோவில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினே பொருத்தப்படுகிறது. போலோவின் 999சிசி, 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி-ஐயும், 1750- 4000 ஆர்பிஎம்-இல் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

மறுபக்கம் ஃபிகோவில் வழங்கப்படும் 1194சிசி, 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆனது 95 பிஎச்பி மற்றும் 4250 ஆர்பிஎம்-இல் 119 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வே வழங்கப்படுகிறது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

முன்னதாக இவற்றில் இரட்டை-க்ளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது பெடல் மாற்றிகள் கொடுக்கப்படுகின்றன. ஃபோக்ஸ்வேகன் போலோவில் டிப்ட்ரானிக் மோடும், ஃபிகோவில் கியரை மேனுவலாக மாற்ற '+' மற்றும் '-' பொத்தான்களும் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

பரிமாண அளவுகள்

பரிமாணங்களை பொறுத்தவரையில் ஃபோக்ஸ்வேகன் போலோ, ஃபோர்டு ஃபிகோவை காட்டிலும் 30 மிமீ மட்டுமே நீளமான ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது. அதேபோல் உயரத்திலும் கிட்டத்தட்ட 12 செ.மீ கூடுதல் உயரமானதாக போலோ வடிவமைக்கப்படுகிறது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

ஆனால் ஃபோர்டு ஃபிகோ, போலோவுடன் ஒப்பிடுகையில் கூடுதல் அகலம் கொண்டதாக விளங்குகிறது. வீல்பேஸ் அளவு இவை இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே நீளத்தில் உள்ளதால், இவற்றில் நன்கு விசாலமான கேபின் கிடைக்கிறது. கெர்ப் எடையில், ஏற்கனவே கூறியதுபோல் போலோ கூடுதல் எடைமிக்கதாக உள்ளது.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

வசதிகள்

ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் கார் டைட்டானியம், டைட்டானியம்+ என்ற 2 ட்ரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டைட்டானியம்+ ட்ரிம் நிலையில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், தானியங்கி ஹெட்லேம்ப்கள் மற்றும் நாவிகேஷன் உடன் 7-இன்ச் தொடுத்திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

மறுபக்கம் போலோ ஆட்டோமேட்டிக் காருக்கு வந்தால், இதில் போலோ ஜிடி உள்பட ஏகப்பட்ட வேரியண்ட்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. ஆனால் போலோவில் இரு காற்றுப்பைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் ஃபோர்டு காரில் 6 காற்றுப்பைகள் கொடுக்கப்படுகின்றன.

2021 ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் vs ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக்!! ஆற்றல்மிக்கது எது?

விலை

விலையை பொறுத்தவரையில் ஆற்றல்மிக்க டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுவதினால் போலோ ஆட்டோமேட்டிக் காரின் விலை சற்று அதிகமாக ரூ.8.51 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையில் உள்ளன. அதேநேரம் ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் காரின் விலை ரூ.7.75- 8.2 லட்சங்களாக உள்ளது.

Most Read Articles
English summary
2021 ford figo at vs volkswagen polo tsi at comparison
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X