2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள கார்களுள் 2021 அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்டும் ஒன்றாகும். ஹோண்டாவின் இந்த காம்பெக்ட் செடானின் விற்பனை கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் இல்லை.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

கடந்த 2021 ஜூன் மாதத்தில் 1,487 அமேஸ் கார்களும், ஜூலையில் அதனை காட்டிலும் சற்று குறைவாக 1,134 அமேஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதனால் தான் அமேஸில் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கொண்டுவர ஹோண்டா தயாராகி வருகிறது.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

தற்சமயம் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் ஹோண்டா அமேஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.34 லட்சத்தில் இருந்து ரூ.11.12 லட்சம் வரையில் உள்ளன. புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் சில வசதிகள் புதியதாக வழங்கப்படலாம்.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

இதனை சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்த இந்த ஃபேஸ்லிஃப்ட் செடான் காரை பற்றிய விபரங்களின் மூலம் அறிந்திருந்தோம். இந்த நிலையில் தற்போது 2021 அமேஸ் எஸ் சிவிடி வேரியண்ட்டை விளக்கி காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Image Courtesy: The Car Show

புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டாப் வேரியண்டாக கொண்டுவரப்பட உள்ள விஎக்ஸ் ட்ரிம்மிற்கு கீழே மத்திய-வேரியண்ட்டாக எஸ் வழங்கப்பட உள்ளது. தி கார் ஷோ என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் இந்த மிட்-வேரியண்ட் டீலர்ஷிப் வளாகம் ஒன்றில் இருந்து காட்சி தந்துள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

இந்த காம்பெக்ட் செடான் காரின் முன்பக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றங்களாக கீழ்பகுதியில் கூடுதல் க்ரோம் ஸ்ட்ரிப்களுடன் புதிய முன்பக்க க்ரில், பம்பரில் ஃபாக் விளக்கு மற்றும் புதிய க்ரோம் தொடுதல்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

ஆனால் டாப் விஎக்ஸ் வேரியண்ட்டில் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. பின்பக்கத்தில் C-வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள் ஒளி பிரதிப்பலிப்பான்களுடன் வழங்கப்பட உள்ளன.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

இந்த வீடியோவில் காரின் கைப்பிடிகள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. 15 இன்ச்சில் டைமண்ட் கட், இரட்டை நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் தற்போதைய அமேஸிற்கும், புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது என எதிர்பார்க்கின்றோம்.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

இருப்பினும் கேபின் கருப்பு & பழுப்பு என்ற இரு புதிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படலாம். அதேநேரம் சில்வர் நிறத்தையும் டேஸ்போர்டில் எதிர்பார்க்கலாம். கியர் லிவர் லெதரால் மூடப்பட்டு வழங்கப்பட உள்ளது. இவற்றுடன் தூசி மற்றும் மாசு வடிக்கட்டியும் அப்டேட்களில் ஒன்றாக இடம்பெறவுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

2021 அமேஸின் கேபினில் ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்க 7 -இன்ச்சில் திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சாவி இல்லா நுழைவு, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்டாப்/ ஸ்டார்ட் செய்ய அழுத்து பொத்தான் உள்ளிட்டவை வழங்கபட உள்ளன.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

ஏற்கனவே கூறியதுதான், என்ஜின் தேர்வில் அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் எந்த மாற்றமும் இருக்காது. 1.2 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் இந்த ஹோண்டா காம்பெக்ட் செடான் கார் விற்பனை செய்யப்படுகிறது.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 79 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2021 ஹோண்டா அமேஸ் சிவிடி காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? விவரிக்கும் வீடியோ

இதில் சிவிடி கியர்பாக்ஸை கொண்ட புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் மிட் எஸ் வேரியண்ட் தான் தற்போது டீலர்ஷிப் ஒன்றில் இருந்து காட்சி தந்துள்ளது. புதியதாக கொண்டுவரப்படும் அப்கிரேட்களினால் அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை சற்று அதிகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
2021 Honda Amaze S CVT White Colour Detailed First Look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X