விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

விலையுயர்வு பற்றிய தகவலை கியா நிறுவனம் வெளியிடுவதற்கு முன்னரே இணையத்தில் இதுபற்றிய தகவல் கசிந்துள்ளது. புதிய காரின் விலை எவ்வளவு உயர இருக்கின்றது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

கியா நிறுவனம் விரைவில் அதன் சொனட் காரின் விலையுயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே எந்தெந்த வேரியண்டின் விலை எவ்வளவு உயர இருக்கின்றது என்பது பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் வெளியிட்ட தகவலையே இப்பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

கியா நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாம் தயாரிப்பே சொனெட். இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த காரின் விலையுர்வைப் பற்றிய நிறுவனம் விரைவில் அறிவிக்க இருக்கின்றது. சொனெட் காரை 20க்கும் அதிக தேர்வுகளில் கியா விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இத்துடன், இதில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இருவிதமான எஞ்ஜினையும் அது வழங்குகின்றது.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

இக்கார் அதன் மூத்த சகோதரர் செல்டோஸ் காரைப் போலவே இந்தியாவில் நல்ல விற்பனையைப் பெற்று வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலயே இக்காரின் விலையை உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்து ஏற்கனவே கியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் விரைவில் புதிய விலைப் பட்டியலை அது அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றது.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

முன்னதாக இணையத்தில் கசிந்த விலையுயர்ந்த விலையுர்வு பட்டியலைக்கீழே காணலாம்.

வேரியண்ட் விபரம் புதிய விலை விலை வித்தியாசம்
HTE 1.2L Petrol Rs 6.79 lakh Rs 8,000
HTK 1.2L Petrol Rs 7.69 lakh Rs 10,000
HTK+ 1.2L Petrol Rs 8.55 lakh Rs 10,000
HTK+ Turbo Petrol Rs 9.49 lakh விலையில் மாற்றமில்லை
HTK+ DCT Turbo Petrol Rs 10.49 lakh விலையில் மாற்றமில்லை
HTX Turbo Petrol Rs 9.99 lakh விலையில் மாற்றமில்லை
HTX+ Turbo Petrol Rs 11.65 lakh விலையில் மாற்றமில்லை
HTX+ DT Turbo Petrol Rs 11.75 lakh விலையில் மாற்றமில்லை
GTX+ Turbo Petrol Rs 11.99 lakh விலையில் மாற்றமில்லை
GTX+ DT Turbo Petrol Rs 12.09 lakh விலையில் மாற்றமில்லை
GTX+ DCT Turbo Petrol Rs 12.89 lakh விலையில் மாற்றமில்லை
GTX+ DT DCT Turbo Petrol Rs 12.99 lakh விலையில் மாற்றமில்லை
HTE Diesel Rs 8.25 lakh Rs 20,000
HTK Diesel Rs 9.19 lakh Rs 20,000
HTK+ Diesel Rs 9.69 lakh Rs 20,000
HTK+ AT Diesel Rs 10.59 lakh Rs 20,000
HTX Diesel Rs 10.19 lakh Rs 20,000
HTX+ Diesel Rs 11.85 lakh Rs 20,000
HTX+ DT Diesel Rs 11.95 lakh Rs 20,000
GTX+ Diesel Rs 12.19 lakh Rs 20,000
GTX+ DT Diesel Rs 12.29 lakh Rs 20,000
GTX+ AT Diesel Rs 13.09 lakh Rs 20,000
GTX DT AT Diesel Rs 13.19 lakh Rs 20,000
விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

கசிந்திருக்கும் இந்த புதிய தகவலின் மூலம் கியா சொனெட் கார் ரூ. 8 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலையுயர்வைப் பெற இருப்பது தெரியவந்திருக்கின்றது. டீசல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து சொனெட் வேரியண்டும் ரூ. 20 ஆயிரம்விலையுயர்வைப் பெற இருப்பது டீசல் வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

அதேசமயம், பெட்ரோல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் சில மாடல்களின் விலையை கியா உயர்த்தாமல் இருப்பது இந்திய வாகனத்துறைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பெட்ரோல் எஞ்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மூன்று நிலை வேரியண்டுளின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கின்றது.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

சொனெட் காரின் விலையைப் போலவே செல்டோஸ் எஸ்யூவி-யின் விலையையும் கியா உயர்த்த இருக்கின்றது. இக்காரின் விலை ரூ. 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரையில் உயர்த்தப்பட இருக்கின்றது. இக்காரும் 20க்கும் அதிகமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

கியா நிறுவனத்தின் இந்த விலையுயர்வு முடிவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, இந்த ஆண்டில் புதிதாக கார்களை வாங்க திட்டமிட்டிருந்தோர் மத்தியில் பெருத்த வேதையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், 154 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் இந்தியாவில் வீர நடைபோட ஆரம்பித்திருக்கின்றது.

விரைவில் உயர்கிறது கியா சொனெட் காரின் விலை... அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்த தகவல்!

நாட்டின் முன்னணி நிறுவனங்கள்கூட மிக குறைந்தளவில் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்ற வேலையில் இந்நிறுவனம் மட்டும் தனித்துவமான மிகப்பெரிய டிமாண்டினைப் பெற்றிருப்பது புதிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. இந்தநிலையிலேயே விலையுயர்வுகுறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
2021 Kia Sonet Price List - Table. Read In Tamil.
Story first published: Saturday, January 2, 2021, 19:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X