பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

பனோராமிக் சன்ரூஃப் உடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் ஸ்பை படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ மற்றும் தார் மாடல்களின் புதிய தலைமுறைகளின் வருகையை கடந்த 2020ஆம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. அதன்படி முதலாவதாக 2020 தார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானது.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

மற்ற இரண்டின் அறிமுகங்கள் கொரோனாவினால் தாமதமானது. இருப்பினும் இவற்றின் சோதனை ஓட்டங்கள் எந்தவொரு தடையும் இல்லாமல் கடந்த ஆண்டு மத்தியில் இருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

ஒவ்வொரு சோதனை ஓட்டங்களின் போதும் இந்த இரு 2021 மாடல்களை பற்றியும் நமக்கு புது புது விஷயங்கள் தெரியவந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலம் வெளியாகியுள்ள சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-இல் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

தோற்றத்தை பொறுத்தவரையில் தற்போதைய எக்ஸ்யூவி500-ஐ காட்டிலும் அதன் 2021 வெர்சன் முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. பரிமாண அளவுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

இதனால் உட்புற கேபினும் நன்கு பெரியதாகியுள்ளது. முன்பக்கத்தில் க்ரில் அமைப்பு ப்ரீமியம் தோற்றத்திற்காக க்ரோம் ஸ்லாட்களை பெற்றுள்ளது. அதேபோல் அலாய் சக்கரங்களின் டிசைனும் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் டாப் வேரியண்ட்களில் மட்டுமே இரு-நிற பெயிண்ட்டில் வழங்கப்படவுள்ளன.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

பின்பக்கத்தில் பெரிய எல்இடி டெயில்லைட்களை பெற்றுள்ள 2021 எக்ஸ்யூவி500 கார் உட்புறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என இரு டிஜிட்டல் தொடுத்திரைகளை பெற்றுள்ளது.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

தற்போதைய எக்ஸ்யூவி500-இல் வழங்கப்படும் அதே 2.2 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு எம்ஹாவ்க் டீசல் என்ஜின் தான் சற்று கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலும், புதியதாக 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு எம்ஸ்டாலியோன் பெட்ரோல் என்ஜின் உடனும் இந்த 2021 எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ளது.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

டாப் வேரியண்ட்களில் மட்டுமே அனைத்து-சக்கர ட்ரைவ் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ள இந்த எம்ஸ்டாலியோன் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500

7 இருக்கைகளுடன் வெளிவரும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருக்கு போட்டியாக புதிய எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா கிராவிட்டாஸ் கார்கள் சந்தையில் விற்பனையில் உள்ளன. 2021 எக்ஸ்யூவி500-இன் விலை ரூ.13 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
new mahindra xuv500 spy pics with panoramic sunroof
Story first published: Wednesday, January 6, 2021, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X