வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகி செலிரியோ கார் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

முதல் தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ கார், இந்திய சந்தையில் கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை 5.90 லட்சத்திற்கும் மேற்பட்ட செலிரியோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

கவர்ச்சியான டிசைன், குறைவான விலை ஆகிய சிறப்பம்சங்களுடன், இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய பெட்ரோல் கார் என்ற பெருமையுடனும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின் ஹைலைட்களையும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

வெளிப்புற டிசைன்

மாருதி சுஸுகி செலிரியோ கார் முன்பை விட தற்போது வட்ட வடிவில் இருக்கிறது. அத்துடன் புதிய ரேடியண்ட் க்ரில், ஷார்ப்பான ஹெட்லைட்கள், புதிய 15 இன்ச் அலாய் வீல்கள், கவர்ச்சிகரமான பாடி லைன்கள் மற்றும் புதிய டெயில் லைட்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

மேலும் பழைய மாடலை காட்டிலும் புதிய தலைமுறை மாடல் அகலமானது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரில், கதவை திறக்கும் கோணமும் சற்றே மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காருக்குள் ஏறுவதும், இறங்குவதும் எளிமையாக இருக்கும். குறிப்பாக வயதானவர்களால் மிகவும் எளிமையாக காரில் ஏறி, இறங்க முடியும்.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

கேபின்

புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் டேஷ்போர்டு லேஅவுட் மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. எடுப்பான தோற்றம் அளிக்கும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் இதனை மேம்படுத்தியுள்ளது. டேஷ்போர்டின் பக்கவாட்டில் வட்ட வடிவ ஏர் வெண்ட்களும், மைய பகுதியில் செங்குத்தான ஏர் வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

மேலும் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் புதிய மாருதி சுஸுகி செலிரியோ பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். அத்துடன் கியர் ஷிஃப்ட் லிவரும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டியரிங் வீலில் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் உள்ளன.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

வண்ண தேர்வுகள்

புதிய மாருதி சுஸுகி செலிரியோ கார் மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கும். இதில், சிகப்பு மற்றும் நீலம் ஆகியவை புதிய வண்ணங்கள் ஆகும். மேலும் சில்க்கி சில்வர், க்ளிஸ்டரிங் க்ரே, ஆர்க்டிக் ஒயிட் மற்றும் காஃபின் ப்ரவுன் ஆகிய வண்ணங்களிலும் 2021 மாருதி சுஸுகி செலிரியோ கார் கிடைக்கும். அதிக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக நிறைய வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

இன்ஜின், கியர் பாக்ஸ், மைலேஜ்

2021 மாருதி சுஸுகி செலிரியோ காரில் புதிய கே10 (K10) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் என்ற சிறப்பான மைலேஜை எட்டுவதற்கு இந்த இன்ஜின் உதவி செய்கிறது. இதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தில் இந்தியாவிலேயே தலைசிறந்த பெட்ரோல் கார் என்ற பெருமையை புதிய மாருதி சுஸுகி செலிரியோ பெறுகிறது.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்த சிறப்பான மைலேஜ் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும். புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரின் இன்ஜின் அதிகபட்சமாக 65 பிஹெச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகளில் புதிய மாருதி சுஸுகி செலிரியோ கார் கிடைக்கும்.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

முன்பதிவு

புதிய மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு ஏற்கனவே முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. 11 ஆயிரம் ரூபாயை முன் பணமாக செலுத்தி, இந்த காரை புக்கிங் செய்து கொள்ளலாம். மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா டீலர்ஷிப்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக புதிய செலிரியோ காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

வெறும் 5 லட்சத்துக்கு புது கார்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... வேற எந்த காரும் இவ்ளோ தராது!

விலை

புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.94 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது சவாலான விலை நிர்ணயமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 maruti suzuki celerio here s everything you need to know
Story first published: Thursday, November 11, 2021, 8:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X