ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

மிகவும் குறைவான விலையில் புதிய மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ இன்று (நவம்பர் 10) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான மாடல்களில் ஒன்றாக செலிரியோ திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் செலிரியோ காரை மாருதி சுஸுகி மேம்படுத்தியிருப்பதால், அதன் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

குறிப்பாக தற்போது கோவிட்-19 பிரச்னை இருந்து வருவதால், பொது போக்குவரத்தை மக்கள் பெரிதாக விரும்பவதில்லை. அதற்கு பதிலாக குறைவான செலவில் சொந்த காரில் பயணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ நல்ல தேர்வு. ஏனெனில் இந்த காரின் விலை குறைவு. அத்துடன் சிறப்பான மைலேஜையும் வழங்கும்.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

எனவே மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு புதிய செலிரியோ சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி செலிரியோ கார் முதல் முறையாக கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது முற்றிலும் மேம்படுத்தப்பட்ட இரண்டாவது தலைமுறை மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

புதிய மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு தற்போது விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெற்று வருகிறது. அரேனா டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ நீங்கள் புதிய செலிரியோ காரை முன்பதிவு செய்ய முடியும். 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

5வது தலைமுறை ஹார்டெக்ட் (Heartect) பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய மாருதி சுஸுகி செலிரியோ கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை கே10சி (K10C) பெட்ரோல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்துள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய செலிரியோ பெற்றுள்ளது.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

மேலும் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய பெட்ரோல் கார் (India's Most Fuel-efficient Petrol Car) என்ற பெருமையும் புதிய மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு உண்டு. இதற்கு இதன் திறன்மிக்க அடுத்த தலைமுறை கே10சி இன்ஜினே மிக முக்கியமான காரணம். பழைய மாடலை காட்டிலும் புதிய மாடல் 15-23 சதவீதம் அதிக மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

புதிய மாருதி சுஸுகி செலிரியோ கார் ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய பெட்ரோல் கார் என்ற பெருமையை இது பெறுகிறது. இது மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ள மைலேஜ் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் சற்று மைலேஜ் குறையலாம்.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

எப்படியும் குறைந்தபட்சமாக ஒரு லிட்டருக்கு 20-22 கிலோ மீட்டர் மைலேஜை புதிய மாருதி சுஸுகி செலிரியோ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பெட்ரோல் கார் இந்த அளவிற்கு மைலேஜ் வழங்குவது, குறிப்பாக எரிபொருள் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த அளவிற்கு மைலேஜ் கிடைப்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம்தான்.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 1.0 லிட்டர் கே10சி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 65 ஹெச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் குறைவான விலையில் கிடைத்தாலும், அதிக மைலேஜை வழங்கினாலும், பாதுகாப்பில் கோட்டை விட்டு விடுவதாக புகார்கள் உள்ளன. ஆனால் பழைய மாடலை காட்டிலும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடல் பாதுகாப்பானது. இதில் பாதுகாப்பிற்கு நிறைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

இதன்படி முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட் மற்றும் ஹில்-ஹோல்டு அஸிஸ்ட் ஆகிய வசதிகளை புதிய மாருதி சுஸுகி செலிரியோ பெற்றுள்ளது. இதில், ஹில்-ஹோல்டு அஸிஸ்ட் வசதி வழங்கப்படுவது இந்த செக்மெண்ட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

அதே நேரத்தில் புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரின் பூட் ஸ்பேஸ் 313 லிட்டர்கள் ஆகும். இது பழைய மாடலை காட்டிலும் 40 சதவீதம் பெரியது என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபயரி ரெட் மற்றும் ஸ்பீடி ப்ளூ ஆகிய 2 புதிய வண்ணங்கள் உள்பட மொத்தம் 6 வண்ணங்களில் 2021 மாருதி சுஸுகி செலிரியோ கார் கிடைக்கும்.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

இதுதவிர சில்க்கி சில்வர், க்ளிஸ்டரிங் க்ரே, ஆர்க்டிக் ஒயிட் மற்றும் காஃபின் ப்ரவுன் ஆகிய வண்ணங்களிலும் புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரை நீங்கள் தேர்வு செய்யலாம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய செலிரியோ காரின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் இன்று அறிவித்தது. இதன்படி வெறும் 4.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் புதிய மாருதி சுஸுகி செலிரியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.94 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். குறைவான விலை என்றாலும் புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி ஆகியவை முக்கியமானவை.

ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் கெடைக்கும்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

மேலும் ஸ்மார்ட் கீ உடன் இன்ஜின் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எம்ஐடி உடன் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளையும் புதிய மாருதி சுஸுகி செலிரியோ பெற்றுள்ளது. பண்டிகை காலத்தையொட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 maruti suzuki celerio launched in india here are all the details
Story first published: Wednesday, November 10, 2021, 14:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X