இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!! மார்ச்சில் அறிமுகம்

2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் முதன்முறையாக இந்திய சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இது தொடர்பான படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

கடந்த 2020ல் உலகளவில் வெளியிடப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் மோட்டார்பீம் செய்திதளத்தின் மூலமாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் எரிக்கும் நெருப்பின் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. அதேநேரம் மேற்கூரை கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

சர்வதேச மாடலை போன்று தற்போது இந்திய சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரும் தற்போதைய ஸ்விஃப்ட் ஒப்பிடுகையில் வித்தியாசமான க்ரில் அமைப்பை கொண்டிருக்கலாம்.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

இதனால்தான் அந்த பகுதி மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. க்ரில் அமைப்பு க்ரோம் ஸ்ட்ரிப் ஒன்றின் மூலமாக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இவற்றுடன் பம்பர் வித்தியாசமான ஸ்டைலில் வழங்கப்பட்டுள்ளதை தவிர்த்து காரின் வெளிப்புற தோற்றத்தில் வேறெந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

இருப்பினும் புதிய அலாய் சக்கரங்களையும், அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் மிக குறைவான அளவில் திருத்தயமைக்கப்பட்ட உட்புற கேபினையும் 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கலாம்.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் மாருதி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் கே12சி பெட்ரோல் என்ஜினை வழங்கவுள்ளது. அதிகப்பட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் அமைப்பில் எந்த மைல்ட்-ஹைப்ரீட் உதவி யூனிட்டும் வழங்கப்பட போவதில்லை.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

என்றாலும், கார் அதிக மைலேஜை வழங்கும் விதத்தில் மாருதி வழங்கும். ஸ்விஃப்ட்டில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை அப்படியே அதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனிலும் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சாலையில் முதன்முறையாக காட்சித்தந்த 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

அதேபோல் ஸ்விஃப்ட்டின் தற்போதைய ரூ.5.19 லட்சம் மற்றும் ரூ.8.02 லட்சம் என்ற விலையிலும் அதிகரிப்பு கொண்டுவரப்படலாம். இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் விற்பனை மிக அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த காரின் விலை அதிகரிக்கப்பட்டாலும், அது காரின் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது.

Most Read Articles

English summary
2021 Maruti Swift Facelift Spied In India For 1st Time – Launch By March
Story first published: Tuesday, January 12, 2021, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X