டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ஹெக்டர் எஸ்யூவியை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கவர்ச்சிகரமான டிசைன், சவாலான விலை நிர்ணயம் மற்றும் அட்டகாசமான வசதிகள் ஆகிய காரணங்களால், இந்திய சந்தையில் உடனடியாக எம்ஜி ஹெக்டர் பிரபலமானது. ஆனால் சந்தை போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், ஹெக்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக எந்த ஒரு புதிய கார் என்றாலும், அறிமுகம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த பின்னர்தான், ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை பெரும்பாலான நிறுவனங்கள் கொண்டு வரும். ஆனால் ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 18 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை 12.89 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது ஆரம்ப நிலை ஸ்டைல் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் டாப் வேரியண்ட்டான ஷார்ப் டீசல் மேனுவல் வேரியண்ட்டின் விலை 18.32 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்டேரி ப்ளூ வண்ணம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது முதன் முதலில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஸ்டாண்டர்டு ஹெக்டரிலும் வழங்கப்படுகிறது.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிசைன்

பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன் பெரிய அளவில் மாற்றப்படவில்லை. இதனை பார்த்த உடனே உணர்ந்து கொள்ள முடியும். எனினும் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பதை முதலில் முன் பகுதியில் இருந்து தொடங்குவோம்.

முன் பகுதியில் முதலில் கவனிக்க கூடிய மாற்றமாக க்ரில் அமைப்பு உள்ளது. ஆம், எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் புதிய க்ரில் அமைப்பை பெற்றுள்ளது. மற்றபடி டைனமிக் இன்டிகேட்டர்களுடன் எல்இடி டிஆர்எல்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. அத்துடன் முழு எல்இடி ஹெட்லைட் செட்அப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர முன் பகுதியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் புதிய 18 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்களை பெற்றுள்ளது. அலாய் வீல்களின் டிசைன், இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில் இருப்பதை போன்று உள்ளது. எம்ஜி ஹெக்டர் பெரிய வாகனம் எனும் நிலையில், இதன் ஒட்டுமொத்த அளவுடன் அலாய் வீல்களின் அளவு தற்போது நன்றாக பொருந்துகின்றன. இதை தவிர்த்து விட்டு பார்த்தால், பக்கவாட்டு தோற்றம் கிட்டத்தட்ட பழைய மாடலை போன்றேதான் உள்ளது.

அதே சமயம் இந்த புதிய மாடலில் கருப்பு நிற ஓஆர்விஎம்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் இருபுறமும் இன்டிகேட்டர்களும், 360 டிகிரி கேமரா வசதிக்காக கேமராக்களும் ஒருங்கிணைந்து கொடுக்கப்பட்டுள்ளன.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

காரின் உள்ளே நுழைந்தால் விசாலமான கேபின் நம்மை வரவேற்கிறது. பெரிய பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளதால், கேபின் காற்றோட்டமாக உள்ளது. கருப்பு-பழுப்பு வண்ண ட்யூயல் டோன் இன்டீரியரை இந்த கார் பெற்றுள்ளது.

இதுதவிர ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணிகளுக்கு வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் இன்டீரியர் ரியர் வியூ மிரரர் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர வாய்ஸ் கமாண்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வாய்ஸ் கமாண்டுகளை வழங்க முடியும். இதுதவிர முன் பக்க பயணியின் இருக்கைக்கு அடுத்தபடியாக, அதாவது சீட் வென்டிலேஷன் சிஸ்டமை இயக்குதவதற்கான பட்டனுக்கு மேலே யுஎஸ்பி சார்ஜிங் ஸ்லாட்டும் வழங்கப்பட்டுள்ளது.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

அத்துடன் ட்யூயல்-டோன் டேஷ்போர்டையும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது. ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடலில் இருந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவை புதிய மாடலிலும் அப்படியே வழங்கப்பட்டுள்ளன. ஸ்டியரிங் வீலில் உள்ள கண்ட்ரோல்கள் சரியான இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. எனவே பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ளது. ஆனால் சீட் வென்டிலேஷன் சிஸ்டமை இயக்குதவதற்கான பட்டன் சரியான இடத்தில் வழங்கப்படவில்லை என நாங்கள் நினைக்கிறோம். இன்னும் எளிமையாக கையாளக்கூடிய இடத்தில் அதனை வழங்கியிருக்கலாம்.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இந்த காரின் முன் பக்க இருக்கைகள் அமர்வதற்கு சௌகரியமாக உள்ளன. முதுகிற்கும், தொடைக்கும் நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. காரை ஓட்டிப்பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், தொலைதூர பயணங்களின்போது இருக்கைகள் உங்களை சோர்வடைய செய்யாது என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும். அதே சமயம் இரண்டாவது வரிசையும் விசாலமாக உள்ளது. மூன்று பயணிகள் எளிதாக அமர முடியும்.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இன்ஜின் தேர்வுகள்

சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலின் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள், ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. 143 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 173 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் என மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படும்.

பெட்ரோல் இன்ஜினுடன் 48V மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து இன்ஜின் தேர்வுகளுடனும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே சமயம் ஹைப்ரிட் அல்லாத பெட்ரோல் இன்ஜினுடன் டிசிடி தேர்வு ஆப்ஷனலாக கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது!

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் முன்பை விட தற்போது இன்னும் மெருகேறியுள்ளது. உருவத்தில் பெரிதாக இருப்பதால், குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற காராக இது இருக்கும். அத்துடன் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட அம்சங்களுடன் விலை மிகவும் அதிகமாக இல்லாத ஒரு காரை வாங்குவது குறித்து நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பரிசீலனை செய்யலாம்.

டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுக்கு எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் நேரடி போட்டியாக இருக்கும். இதுதவிர ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களின் டாப் வேரியண்ட்களுடனும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடும்.

Most Read Articles

English summary
2021 MG Hector Facelift First Look Review: Design, Interior, Features, Engine, Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X