2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்

2021 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் கார்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

இந்தியாவில் வேகமாக பிரபலமான எம்ஹி ஹெக்டரின் 7-இருக்கை வெர்சனாக ஹெக்டர் ப்ளஸ் அறிமுகமானது. 3 இருக்கை வரிசைகளுடன் கொண்டுவரப்பட்ட இந்த கார் தோற்றத்திலும் ஹெக்டருடன் சற்று வித்தியாசப்படுகிறது.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

அதிலும் ஹெக்டர் ப்ளஸுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ஆக்ஸஸரீகளை பொருத்தினால் ஹெக்டரை காட்டிலும் கிட்டத்தட்ட முழுவதுமாக வித்தியாசப்படும். இதற்கிடையில் தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோக்கள் தொகுப்பாக ஒரே வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளன. அது இதோ...

காரின் வெளிப்புறத்தில் வெவ்வேறான க்ரோம்களை காரின் நிறத்திற்கு ஏற்றாற்போல் கூடுதல் ஆக்ஸஸரீயாக பொருத்தி கொள்ள முடியும். இதனுடன் சில்வர் நிறத்தில் கார் கவர், பக்கவாட்டில் படிக்கட்டு, க்ரோம் தொடுதல் உடன் ஜன்னல்களுக்கு ஒளி எதிரொலிப்பான் மற்றும் மட் ஃப்ளாப்ஸ் உள்ளிட்டவையும் ஹெக்டர் ப்ளஸ் காருக்கு கூடுதல் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படுகின்றன.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

உட்புற கேபினுக்கு வெளிப்புறத்தை காட்டிலும் அதிகளவில் கூடுதல் ஆக்ஸஸரீகளை எம்ஜி நிறுவனம் வழங்குகிறது. இதில் தரமான உள்ளமைவு தேர்வுகள், தரை பாய்கள், சறுக்கி விடாத பாய்கள், ஜன்னல்களுக்கு சன் ஷேட்ஸ், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு திரை பாதுகாப்பான், முன் இருக்கைகளுக்கு பின்புறத்தில் லேப்டாப் வைப்பதற்கான ஹேங்கர் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

இவை மட்டுமின்றி ஆடைகளை மாட்டுவதற்கான ஹேங்கர், இருக்கைகளில் அடி முதுகிற்கான குஷின், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட், பிராண்டின் கதவு சில் தட்டுகள், ஸ்டேரிங் சக்கர கவர் போன்றவையையும் கூடுதல் ஆக்ஸஸரீகளாக வாங்கி தங்களது ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களில் பொருத்தி கொள்ளலாம்.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

கூடுதல் தொழிற்நுட்ப வசதி ஆக்ஸஸரீகள் என்று பார்த்தால், இரு விதமான வயர் இல்லா போன் சார்ஜர்கள், காற்று சுத்திகரிப்பான், காற்று ஈரப்பதமூட்டி, சிறிய தூசி உறிஞ்சி, பின் இருக்கை பொழுதுப்போக்கு தொகுப்பு போன்றவை உள்ளன.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

காற்று-ரூஃப் கேரியர், பிளாஸ்டிக் ரூஃப் கேரியர், 300 அடி தூரம் வரையில் கேட்கக்கூடிய அலாரம், சீட் பெல்ட் அறுப்பான் மற்றும் விண்ட்ஷீல்டு உடைப்பான் முதலியவையும் ஆக்ஸஸரீ லிஸ்ட்டில் உள்ளன. கூடுதலாக பொருத்தப்படும் க்ரோம் துண்டுகளை நீக்கும் தொகுப்பையும் எம்ஜி நிறுவனம் வழங்குகிறது.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

இருக்கை கவர்கள், தரை பாய்கள், டிகால் தேர்வுகள் உள்ளிட்டவை 5-இருக்கை ஹெக்டரிலும் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் ஹெக்டர் ப்ளஸில் இருந்து தோற்றத்தில் வித்தியாசப்படுகின்றன.

2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்?

2021 எம்ஜி ஹெக்டரில் வழங்கப்படும் விலை உயர்ந்த ஆக்ஸஸரீ, இன்-கார் குளிர்சாதன பெட்டி ஆகும். இதன் விலை சுமார் ரூ.22,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் இசட்எஸ் மாடலின் பெட்ரோல் வெர்சனை அறிமுகப்படுத்தவுள்ளது.

Most Read Articles

English summary
2021 MG Hector, Hector Plus Official Accessories Listed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X