இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

உலகளவில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் போட்டி வலுத்து வரும் நிலையில் 2021 பியூஜியோட் 308 கார் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பியூஜியோட் காரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் வடிவமைக்கபட்டுள்ள புதிய பியூஜியோட் 308 கார், பியூஜியோட் நிறுவனத்தின் புதிய முத்திரை பெற்றது மட்டுமில்லாமல் உட்புற கேபினில் சில கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளையும் பெற்று வந்துள்ளது.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

மூன்றாம் தலைமுறை ஸ்டெல்லாண்டிஸின் எம்ப்2 ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பியூஜியோட் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் வீல்பேஸின் நீளம் 55மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காரின் உயரம் 20மிமீ குறைந்துள்ளது.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

முன்பு நிறுவனத்தின் லோகோவில் சிங்கத்தின் முழு உருவமும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கர்ஜிக்கும் சிங்கத்தின் தலைப்பகுதி மட்டுமே லோகோவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் முன்பை காட்டிலும் தற்போது பியூஜியோட் நிறுவன லோகோ நன்றாக உள்ளது.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

ஆலிவின் பச்சை, பியான்கா வெள்ளை, கமுலஸ் க்ரே, நெரா கருப்பு, முத்தின் வெள்ளை, வெர்டிகோ நீலம் மற்றும் மருந்தின் சிவப்பு என்ற நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ள 2021 பியூஜியோட் 308 காரின் ஜிடி மற்றும் ஜிடி ப்ரீமியம் வேரியண்ட்களில் புதிய எல்இடி ஹெட்லேம்ப்களில் பியூஜியோட் மேரிக்ஸ் எல்இடி தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

முன்பக்க அகலமான க்ரில் அமைப்பு சிக்கலான பேட்டர்னில் வழங்கப்பட, ரிவர்ஸ் விளக்குகள் பின்பக்க பம்பரில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் காரின் உட்புறமும் முன்பே கூறியதுபோல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

இதன்படி 10 இன்ச் ஐ-காக்பிட் திரை ஆனது முப்பரிமாண தோற்றத்தில் ஸ்டேரிங் சக்கரத்திற்கு மேற்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. காரில் வழங்கப்பட்டுள்ள ஐ-கனெக்ட் மென்பொருள் தொகுப்பு ஆனது வயர் இல்லா திரை மானிடரிங் சிஸ்டத்துடன் 8 வெவ்வேறான ஓட்டுனர் சுயவிவரங்களை அனுமதிக்கிறது.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

பாதுகாப்பு அம்சங்களாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், இயங்கும் பாதையில் விலகாமல் இருக்க உதவும் வசதி, செமி-ஆட்டோமேட்டிக் லேன் சேன்ஞ் மற்றும் எதிர்பார்க்கப்படும் வேகம் பரிந்துரை உள்ளிட்டவை அடங்கிய ஓட்டுனர் உதவி தொகுப்பு இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பியூஜியோட் 308 காரில் இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலும் 12.4 kWh லித்தியம் இரும்பு பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்படவுள்ளது.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

இதில் ஒன்றான ஹைப்ரீட் 180 இ-இஏடி8 வேரியண்ட்டில் 81 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் 150 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் உடன் வழங்கப்படவுள்ளது. இந்த வேரியண்ட்டில் வெறும் எலக்ட்ரிக் மோடில் மட்டுமே 60கிமீ தூரத்திற்கு காரை இயக்க முடியும்.

இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வில், 2021 பியூஜியோட் 308 கார் உலகளவில் வெளியீடு!!

மற்றொரு வேரியண்ட்டான ஹைப்ரீட் 225 இ-இஏடி8 வேரியண்ட்டிலும் அதே 81 கி.வா மோட்டார் தான் 180 எச்பி பவரை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் உடன் வழங்கப்பட உள்ளது. 2021 பியூஜியோட் 308 காருக்கான முன்பதிவுகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளன.

Most Read Articles

மேலும்... #பியூஜியட் #peugeot
English summary
2021 Peugeot 308 Debuts With New Design And Plugin Hybrid Option. Read In Tamil.
Story first published: Friday, March 19, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X