2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரின் இந்திய அறிமுகத்தை இன்று லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ரேஞ்ச் ரோவர் காரை பற்றிய கூடுதல் விபரஙகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

ரூ.2.19 கோடி என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த செயல்திறன்மிக்க எஸ்யூவி கார், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்களுக்கு உண்டான பெரிய அளவிலான சூப்பர்சார்ஜ்டு என்ஜினை பெற்று வந்துள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

இந்த சூப்பர்சார்ஜ்டு என்ஜின் லேண்ட் ரோவரின் ஸ்பெஷல் வாகன செயல்பாட்டு பிரிவினால் தயாரிக்கப்பட்டதாகும். யுகே, கவுண்ட்ரியில் இருந்து சிபியு முறையில் இதுவரையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள லேண்ட் ரோவர் கார்களிலேயே இதுதான் ஆற்றல்மிக்கதாகும்.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடலில் 5.0 லிட்டர், சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 567 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் இணைக்கப்பட்டுள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் எடை குறைவான அலுமினியம் கட்டமைப்பில் பொருத்தப்பட்டுள்ள இந்த சூப்பர்சார்ஜ்டு என்ஜினின் உதவியுடன் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

இந்த 2021 லேண்ட் ரோவர் வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 280கிமீ ஆகும். அனைத்து-சாலை திறனில் எந்தவொரு சமரசமும் செய்யாமல், இந்த எஸ்யூவி காரின் சேசிஸ் கூடுதல் டைனாமிக் ஹேண்ட்லிங்கிற்காக பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

அதேபோல் தோற்றத்திலும் இந்த 2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல், ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் பல விதங்களில் அப்டேட்டாகி உள்ளது. இந்த வகையில் மேம்பட்ட ப்ரேக் குளிர்விப்பிற்காக முன் பம்பரில் புதிய மற்றும் பெரிய காற்று ஏற்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

மேலும் அதிக வெப்பநிலையிலும் சிறப்பாக செயல்படுவதற்காக ப்ரேக் பேட்கள் & டிஸ்க்குகள் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் ஸ்பெஷல் வாகன முத்திரை (SVR) டெயில்லேம்பிற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் 2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர், இலகுவான எஸ்விஆர் பெர்ஃபார்மன்ஸ் இருக்கைகளை பெற்றுள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.2.19 கோடி

இதன் இருக்கைகள் காஸ்ட்லீயான துளையிடப்பட்ட விண்ட்சர் லெதரால் மூடப்பட்டுள்ளன. இவற்றுடன் 825 வாட் 19-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உள்பட கவர்ச்சிகரமான வசதிகளும் இந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தின் உள்ளே வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Jaguar Land Rover India, today announced the introduction of Range Rover Sport SVR in India. The Range Rover Sport SVR is available with SVR’s range-topping 5.0 I supercharged V8 petrol engine that delivers a power of 423 kW and torque of 700 Nm and is capable of accelerating from 0-100 km/h in 4.5 s.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X