சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்.. என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

நாட்டின் மலிவு விலை எம்பிவி ரக கார்களில் ஒன்றான ரெனால்ட் ட்ரைபர் கார் சூப்பரான அப்டேட்களுடன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. 2021 மாடலாக விற்பனைக்கு வந்திருக்கும் இக்கார்குறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், அதன் குறைந்த விலை எம்பிவி ரக காரான ட்ரைபர் மாடலில் புதிய இரு நிற டோன் கொண்ட மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரூ. 5.30 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

மிக அதிக விலையில் இருந்தால் மட்டுமே எம்பிவி ரக கார்களை வாங்க முடியும் என நினைத்து வந்த இந்தியர்களுக்கு வரபிரசாதமாக ட்ரைபர் காரின் வருகை இருக்கின்றது. எனவேதான் அறிமுக மிகக் குறைந்த காலத்திலேயே 70 வாடிக்கையாளர்களின் கைகளில் இக்கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் இக்காரை 2019ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. அப்போது ஒற்றை நிறம் கொண்ட தேர்வில் மட்டுமே இக்கார் களமிறக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இரு நிறங்கள் கொண்ட காராக ட்ரைபர் எம்பிவி ரக காரை ரெனால்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

இதுவே, புதிய 2021 ரெனால்ட் ட்ரைபர் காரின் சிறப்பம்சமாக இருக்கின்றது. இரு நிற தேர்வு மட்டுமின்றி பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளில் எல்இடி இன்டிகேட்டர்களையும் ரெனால்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதிகளை ட்ரைபரின் உயர்நிலை வேரியண்டான ஆர்எக்ஸ்இசட்-ல் மட்டுமே பெற முடியும்.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

இத்துடன், இன்னும் புதிய அம்சங்களையும் 2021 ட்ரைபர் காரில் ரெனால்ட் சேர்த்திருக்கின்றது. ஸ்டியரிங் வீலில் ஆடியோ மற்றும் செல்போன் அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் வசதி, டிரைவர் இருக்கையின் உயர்த்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி என கூடுதல் சில சிறப்பு வசதிகள் இக்காரில் புதிதாக வழங்கப்பட்டிருக்கின்றன.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

இது குறைந்த விலையில் அதிக பலன்கள் கொண்ட காரை தேடும் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என யூகிக்கப்படுகின்றது. ரென்லாட் நிறுவனம் ட்ரைபர் எம்பிவி காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர், நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினையே பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

இந்த எஞ்ஜினை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்விலும் ரெனால்ட் வழங்கி வருகின்றது. இந்த காரில் ஏழுபேர் அமர்ந்து செல்லும்படி இருக்கை அமைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. பெரியவர்கள் ஐவரும், சிறுவர்கள் இருவரும் அமர்ந்து செல்லும் வசதியுடன் இருக்கைகள் இருக்கின்றன.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

இக்காரின் பிரத்யேக வடிவமைப்பிற்காக சிஎம்எஃப்-ஏ+ பிளாட்பாரத்தை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே மேக்னைட் போன்ற பிற புதுமுக கார்களை நிறுவனம் தயாரித்து வருகின்றது. புதிய இரட்டை நிற தேர்வுகளுடன் சேர்த்து பழைய ஒற்றை நிற அடிப்படையில் ட்ரைபர் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

இதன்படி, நிலவொளி வெள்ளி, மின்சார நீலம், ஜான்ஸ்கர் நீலம், குளிர் வெள்ளை மற்றும் அவுட் பேக் வெண்கலம் ஆகிய நிறங்களில் இக்கார் கிடைக்கும். இந்த காரின் பூட் ஸ்பேஸ் 625 லிட்டர் ஆகும். இதில் ஒரு வார ட்ரிப்பிற்கு தேவையான ஒரு குடும்பத்திற்கான ஒட்டுமொத்த பொருட்களையும் ஏற்றிச் செல்ல முடியும்.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

2021 ரெனால்ட் இரு நிற ட்ரைபர் காரைத் தொடர்ந்து டர்போசார்ஜட் எஞ்ஜின் வெர்ஷனிலும் இக்காரை களமிறக்க ரெனால்ட் திட்டமிட்டு வருகின்றது. இந்த வருடத்தின் இறுதிக்குள் இக்கார் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினிலேய இது எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த மேலும் முக்கியமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான மலிவு விலை எம்பிவி கார்... என்னென்ன அம்சங்கள் புதுசா இடம்பெற்றிருக்கு தெரியுமா?

வேரியண்ட் வாரியான விலை விபரத்தை பட்டியலாகக் கீழே பார்க்கலாம்:

ஆர்எக்ஸ்இ எம்டி (RXE MT) - ரூ 5.30 லட்சம்

ஆர்எக்ஸ்எல் எம்டி (RXL MT)- ரூ 5.99 லட்சம்

ஆர்எக்ஸ்டி எம்டி (RXT MT)- ரூ 6.55 லட்சம்

ஆர்எக்ஸ்இசட் எம்டி (RXZ MT) - ரூ 7.15 லட்சம்

ஆர்எக்ஸ்எல் ஏஎம்டி (RXL AMT) - ரூ 6.50 லட்சம்

ஆர்எக்ஸ்டி ஏஎம்டி (RXT AMT) - ரூ 7.05 லட்சம்

ஆர்எக்ஸ்இசட் ஏஎம்டி (RXZ AMT) - ரூ 7.65 லட்சம்

Most Read Articles
English summary
2021 Renault Triber MPV Launched In India At Rs. 5.30 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X