Just In
- 54 min ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் விற்பனைக்கு வந்தது டாடா சஃபாரி... விலை எவ்ளோனு தெரியுமா?
புதிய டாடா சஃபாரி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய சஃபாரி எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று (பிப்ரவரி 22) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் பேஸ் வேரியண்ட்டிற்கு 14.69 லட்ச ரூபாயும், டாப் வேரியண்ட்டிற்கு 21.45 லட்ச ரூபாயும் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tata Safari | Manual Price | Automatic Price |
XE | ₹14.69 Lakh | |
XM | ₹16.00 Lakh | ₹17.25 Lakh |
XT | ₹17.45 Lakh | |
XT+ | ₹18.25 Lakh | |
XZ | ₹19.15 Lakh | ₹20.40 Lakh |
XZ+ (6/7 seater) | ₹19.99 Lakh | ₹21.25 Lakh |
Adventure Persona | ||
XZ+ (6/7 seater) | ₹20.20 Lakh | ₹21.45 Lakh |

5 சீட்டர் ஹாரியர் எஸ்யூவிக்கு மேலாக புதிய டாடா சஃபாரி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மையான மாடலாக புதிய சஃபாரி உருவெடுத்துள்ளது. புதிய டாடா சஃபாரி எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. டெலிவரி பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

XE, XM, XT, XT+, XZ மற்றும் XZ+ என மொத்தம் 6 வேரியண்ட்களில் புதிய டாடா சஃபாரி கிடைக்கும். 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் புதிய டாடா சஃபாரியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். புதிய டாடா சஃபாரி காரின் 6 சீட்டர் மாடலின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 7 சீட்டர் மாடலில் பென்ச் வகை இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டாப் மாடலான XZ+ வேரியண்ட்டின் அடிப்படையில் அட்வென்ஜர் எடிசனையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் D8 பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒமேகா பிளாட்பார்மில், புதிய டாடா சஃபாரி கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ‘இம்பேக்ட் 2.0' டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது.

5 சீட்டர் ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் புதிய சஃபாரி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். டிசைன் உள்பட பல்வேறு அம்சங்கள் ஹாரியரில் இருந்து புதிய சஃபாரிக்கு அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும் சில அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான மாற்றங்கள் பின் பகுதியில்தான் செய்யப்பட்டுள்ளன.

புதிய டாடா சஃபாரியில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எல்இடி ஸ்டாப் லேம்ப் உடன் மேற்கூரையுடன் இணைந்த வகையில் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் பெரும்பாலான வசதிகளும், ஹாரியரில் இருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்படி டாடா ஹாரியரில் உள்ள அதே செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்தான், புதிய சஃபாரியிலும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 8.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான ஸ்விட்ச்கள் உடன் ஸ்டியரிங் வீலும் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பத்தையும் புதிய டாடா சஃபாரி பெற்றுள்ளது. அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், மூன்றாவது வரிசையிலும் ஏசி வெண்ட்கள், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் என புதிய சஃபாரி அமர்க்களப்படுத்துகிறது. ஆனால் ஹாரியர் எஸ்யூவியில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் புதிய சஃபாரியிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. புதிய சஃபாரியின் அனைத்து வேரியண்ட்களிலும், 2 வீல் டிரைவ் சிஸ்டம் மூலம், இன்ஜின் சக்தி முன் சக்கரங்களுக்குதான் செலுத்தப்படுகிறது.