விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

புதிய 2021 டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தனது மாடல் எஸ் செடான் (Tesla Model S) எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்துள்ளது. புதிய 2021 டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி வரும் வாரங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தாலும், இன்டீரியர் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

வெளிப்புறத்தை பொறுத்தவரை, புதிய முன் பக்க பம்பர், கருப்பு நிற டோர் ஹேண்டில்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் கண்ணாடி மேற்கூரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. வெளிப்புறத்தில் நுட்பமான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தாலும், டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் முன்பை விட தற்போது சற்று ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

அதே சமயம் இந்த காரின் இன்டீரியர் முற்றிலும் புதியதாக உள்ளது. புதிய ஸ்டியரிங் வீல் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவைதான் இந்த காருடைய கேபினின் முக்கியமான ஹைலைட்கள். 2021 டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் மூலம், விமானங்களில் இருப்பதை போன்ற புதிய செவ்வக வடிவ ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

இதுதவிர 17 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தொடர்கிறது. இதுதவிர முற்றிலும் புதிய டேஷ்போர்டையும் 2021 டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. அத்துடன் பின் பகுதி பயணிகளுக்கு சிறிய டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

அதே நேரத்தில் 2021 மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரில் ப்ளெயிட் மற்றும் ப்ளெயிட் ப்ளஸ் என இரண்டு புதிய வேரியண்ட்களை டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், ப்ளெயிட் வேரியண்ட்டானது, பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்டிற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இது பெற்றுள்ளது.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

அதே சமயம் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும். டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரின் ப்ளெயிட் ப்ளஸ் வேரியண்ட்டும் இதே செயல்திறனைதான் வெளிப்படுத்தும். ஆனால் இந்த வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 837 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால், 837 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம்.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

ஆனால் ப்ளெயிட் வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 627 கிலோ மீட்டர்கள்தான். எனினும் இதனையும் குறைவான டிரைவிங் ரேஞ்ச் என்று சொல்ல முடியாது. புதிய டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. டெஸ்லா நிறுவனத்தின் வருகை, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டின் முதல் பாதியில் இந்திய சந்தைக்கான முதல் டெஸ்லா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

விமானங்களை போன்ற ஸ்டியரிங் வீல், 837 கிமீ ரேஞ்ச்... இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிய டெஸ்லா மாடல் எஸ்

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரின் அட்டகாசமான டிரைவிங் ரேஞ்ச் உள்ளிட்ட அம்சங்களின் இந்திய வாடிக்கையாளின் எதிர்பார்ப்புகளையும் தூண்டியுள்ளன. ஆனால் மாடல் 3 (Tesla Model 3) எலெக்ட்ரிக் கார்தான், இந்திய சந்தைக்கான டெஸ்லா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா மாடல் எஸ் இந்திய சந்தைக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
2021 Tesla Model S Debuts With 837 Km Driving Range - Here Are All The Details. Read in Tamil
Story first published: Friday, January 29, 2021, 10:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X