அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

2021 ஆண்டின் டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விலையுடன் கூடிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

இந்தியர்களில் பலர் தான் மட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் பயணிக்க வேண்டும் என்பதற்காக கார்களை வாங்கி வருகின்றனர். அத்தகையோருக்கு உதவும் வகையிலேயே அதிக இருக்கை வசதிகளுடன் எம்பிவி ரக கார்கள் இந்திய சந்தையில் கிடைத்து வருகின்றன. அதிக இருக்கைகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த கார்கள் எல்லாம் அதிக விலையைக் கொண்டிருக்கும் என ஒரு சிலர் எண்ணிக் கொள்கின்றனர்.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

அதுதான் இல்லை. இந்திய சந்தையில் குறைந்த விலையிலும்கூட எம்பிவி கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரும் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 எம்பிவி ரக கார்களின் பட்டியலையே விலையுடன் இப்பதிவில் காண இருக்கின்றோம்.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

மாருதி சுசுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6)

விலை: ரூ. 9,84,689 முதல் ரூ. 11,61,189 வரை

மாருதி சுசுகி இந்த எக்ஸ்எல்6 எம்பிவி ரக காரை அதன் புகழ்பெற்ற எர்டிகா மாடலைத் தழுவியே உருவாக்கியிருக்கின்றது. பிரீமியம் வசதிகளை வாரி வழங்கும் வகையில் ஓர் மாடலாகவே இக்கார் இருக்கின்றது. இக்கார் ஆறு இருக்கை வசதிகளைக் கொண்ட ஓர் வாகனம் ஆகும். எனவேதான் இதன் பெயரில் எக்ஸ்எல்6 என மாருதி வைத்திருக்கின்றது.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

இந்த கார் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. எக்ஸ்எல்6 ஜெட்டா பெட்ரோல், எக்ஸ்எல்6 ஆல்ஃபா பெட்ரோல், எக்ஸ்எல்6 ஜெட்டா ஆட்டோமேட்டிக் பெட்ரோல், எக்ஸ்எல்6 ஆல்ஃபா ஆட்டோமேட்டிக் பெட்ரோல் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

இந்த காரில் பிரீமியம் வசதிகளாக ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 7 இன்சிலான தொடுதிரை டிஸ்ப்ளே (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பின்பக்கத்தில் ஏசி வெண்டுகள், கீலெஸ் என்ட்ரீ, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதி என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

மாருதி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)

விலை: ரூ. 7,69,000 முதல் ரூ. 10,47,000 வரை

மாருதி சுசுகி எர்டிகா காரில் அதிகபட்சம் 7 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும். இந்த காரிலும் சில சிறப்பு வசிகளை மாருதி வழங்கியுள்ளது. அந்தவகையில், 7.0 இன்சிலான தொடுதிரை சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கனட்ரோல், இபிடியுடன் கூடி ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ட்யூவர் ஏர்பேக், ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் ஐசோஃபிக்ஸ் பின்பக்க இருக்கை என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

இந்த காரில் பிஎஸ்6 அப்டேட்டிற்கு பின்னரும் 1.5 லிட்டர் எஞ்ஜினே நீடித்து வருகின்றது. இது 103 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இந்த கார் மொத்தமாக 7 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber)

விலை: ரூ. 5,12,000 முதல் ரூ. 7,34,500 வரை

ரெனால்ட் ட்ரைபர் கார் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எம்பிவி காராகும். இக்காரை 7 விதமான வேரியண்டுகளில் ரெனால்ட் நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. அனைத்துமே பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட வேரியண்டுகள் மட்டுமே ஆகும். மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்படத்தக்கது.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

டட்சன் கோ ப்ளஸ் (datsun go+)

விலை: ரூ. 4,25,926 முதல் ரூ. 6,99,976 வரை

இந்தியாவின் மிக விலைக் குறைந்த எம்பிவி கார்களில் டட்சன் கோ ப்ளஸ் காரும் ஒன்று. இக்காரும் ஏழு இருக்கை வசதிக் கொண்ட காராகும். இதனை 2018ம் ஆண்டிலேயே டட்சன் நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து மிக சமீபத்திலேயே இக்காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகப்படுத்தியது.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

இதில், 7.0 இன்சிலான தொடுதிரை வசதி, ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் டீப் டூர் பாக்கெட்ஸ், கவர்ட் குளோவ் பாக்ஸ், ரியர் பார்சல் ஷெல்ஃப் என எக்கசக்க வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பாதுகாப்பு வசதிகளாக கிராஷ் ப்ரொடெக்ஷன், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி பல்வேறு சிறப்பம்சங்களும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த காரும் 7 விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி ஆறு விதமான நிற தேர்விலும் இக்கார் கிடைக்கும்.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

மாருதி சுசுகி ஈகோ (Maruti Suzuki Eeco)

விலை: ரூ. 3,97,800 முதல் ரூ. 6,94,000 வரை

டட்சன் கோ ப்ளஸ் காருக்கு அடுத்தபடியாக மிக மிக மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் காராக மாருதி சுசுகி நிறுவனத்தின் ஈகோ கார் இருக்கின்றது. இக்கார் 8 விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், கார்கோ மற்றும் ஆம்புலன்ஸ் மாடல்களும் அடங்கும்.

அதிக பேர் செல்லலாம்... டாப் 5 விலைக் குறைந்த எம்பிவி கார்கள் பட்டியல்... இவ்ளோ கம்மியான விலையிலா?

மாருதி சுசுகி ஈகோ ஐந்து இருக்கைத் தொடங்கி ஏழு இருக்கைகள் வரையிலான வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி சுப்பீரியர் வெள்ளை, மெட்டாலிக் மிட்நைட் கருப்பு, மெட்டாலிக் சில்க் சில்வர், பிரைட் சிவப்பு, மெட்டாலிக் ப்ளூ ப்ளேஸ் மற்றும் மெட்டாலிக் கிளிஸ்டிங் கிரே ஆகிய ஆறு விதமான நிற தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Top 5 MPV Cars In India Under Rs. 10 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X