Just In
- 53 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 3 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- News
நிலக்கோட்டையின் கலவர நிலவரம்.. சமாளிப்பாரா அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி?
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீண்ட நாட்களாக ஏங்க வைத்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் உரிமையாளர்களின் கை சேர தொடங்கியது... முழு விபரம்!!
வெகு நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அதன் உரிமையாளர்களின் கை வசம் சேர தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனம் அண்மையில் அதன் புகழ்வாய்ந்த ஃபார்ச்சூனர் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்காரின் அறிமுகம் இம்மாதத்தின் தொடக்கத்தில் அரங்கேறியது.

இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் காரை புக்கிங் செய்தோருக்கு அக்காரை டெலிவரி கொடுக்கும் பணியையும் டொயோட்டா தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த காடிவாடி வெளியிட்டிருக்கும் புகைப்படம் மற்றும் தகவல்களையுமே இப்போது இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டொயோட்டா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் காருடன் சேர்த்து புதிய 'லெஜன்டர்' எனும் தேர்வினையும் அறிமுகப்படுத்தியது. இதனை ஃபார்ச்சூனர் மாடலின் டாப்-வேரியண்டாக அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் லெஜன்டர் எனும் பெயரில் வந்திருக்கும் இக்கார் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் அணிகலன்களுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், ஃபார்ச்சூனர் லெஜன்டர் காரின் உட்பகுதி மற்றும் வெளிப்புறப் பகுதி பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கின்றது.

இக்காரின் ஆரம்பநிலை மாடலின் விலை ரூ. 29.98 லட்சம் ஆகும். அதேசமயம், இதன் உச்சப்பட்ட விலை ரூ. 37.58 லட்சமாக இருக்கின்றது. இந்த புதிய வெர்ஷன் ஃபார்ச்சூனர் கார்களை டொயோட்டா நிறுவனம் அதந் எம்ஜிஎஃப் தயாரிப்பு ஆலையில் வைத்தே உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஆலை குர்காவுன் பகுதியில் இயங்கி வருகின்றது.

இங்கிருந்தே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் விற்பனையாளர்கள் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு டெலிவரி கொடுக்கப்பட்டு வருகின்றது. டொயோட்டா நிறுவனம் இக்காரை இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஒன்று 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும், மற்றொன்று 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இக்கார் வழங்கப்படுகின்றன.

மேலும், 4-சக்கர ட்ரைவ் தேர்வும் புதுப்பிக்கப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனரில் வழங்கப்படுகிறது. இதில் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அதிகபட்சமாக 203 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வசதியில் காட்சியளிக்கின்றது.

இது முந்தைய மாடல் ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் அதிக திறன் ஆகும். திறனில் மட்டுமின்றி சிறப்பம்சங்களிலும் இக்கார் சூப்பரானதாக காட்சியளிக்கின்றது. இக்காரில் மறுசீரமைக்கப்பட்ட முகப்புற மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது எல்இடி தரத்திலானதாகும்.

இதேபோன்று புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலில் எல்இடி டிஆர்எல் மின் விளக்கு, கிரில், பம்பர் (முன் மற்றும் பின் பக்கத்தில்), புதிய டெயில் மின் விளக்கு உள்ளிட்டவைச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி 8 இன்சிலான தொடுதிரை இணைப்பு கார் டெக் வசதியுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மென்பொருள் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த அம்சங்களின் மூலம் பெற முடியும். குறிப்பாக ஜியோ ஃபென்சிங், ரியல் டைம் டிராக்கிங் ஆகியவற்றை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.