Just In
- 12 min ago
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Don't Miss!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு
- News
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பென்ஸ் நிறுவனத்தையே ஓரங்கட்டிய டொயோட்டா... உலகின் மிக அதிக மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனம் எது?..
2021ஆம் ஆண்டின் உலகின் அதிக மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனம் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

உலகின் அதிக மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் டொயோட்டா நிறுவனமே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது 2021ம் ஆண்டிற்கான பட்டியல் ஆகும். கடந்த ஆண்டில் இந்த பட்டியலின் டாப் இடத்தில் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் பிடித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டின் உலகின் மதிப்பு மிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் டொயோட்டா இடம்பிடித்திருக்கின்றது. இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடுதல் வருவாயைப் பெற்று இந்த இடத்தை டொயோட்டா பிடித்திருக்கின்றது.

கடந்த ஆண்டு டொயோட்டா நிறுவனத்தின் மதிப்பு 58.07 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. நடப்பாண்டில் இது 59.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கின்றது. அதேசமயம், கடந்த ஆண்டில் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் பெரும் சரிவைச் சந்தித்து இரண்டாம் இடத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது.

அதாவது, கடந்த ஆண்டில் 65.04 பில்லியனாக இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 58.22 பில்லியனாக குறைந்திருக்கின்றது. மக்கள் மத்தியில் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பின்மீது இருந்த வரவேற்பு குறைந்த காரணத்தினாலேயே இந்த மாபெரும் சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அதேசமயம், கொரோனா வைரஸ் பரவலும், பென்ஸ் நிறுவனத்தின் இச்சரிவிற்கு ஓர் காரணமாக அமைந்திருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை ஃபோக்ஸ்வேகன் பிடித்திருக்கின்றது. இந்த நிறுவனம், லேசான வருவாயைச் சந்தித்து இவ்விடத்தைப் பிடித்திருக்கின்றது. கடந்த 2020ம் ஆண்டில் 44.89 பில்லியன் அமெரிக்க டால்களாக இருந்த இதன் மதிப்பு 2021ல் 47.02 ஆக அதிகரித்திருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக மிக மிக லேசான சரிவுகளுடன் நான்காம் இடத்தை பிஎம்டபிள்யூ பிடித்திருக்கின்றது. 2020இல் 40.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு தற்போது 40.44 பில்லியனாக குறைந்திருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, ஜெர்மன் நாட்டைச் சார்ந்த மற்றுமொரு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே ஐந்தாம் இடத்தையும், அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவும் பிடித்திருக்கின்றது. ஏழாவது இடத்திலேயே ஹோண்டா இருக்கின்றது.

இதில், போர்ஷே நிறுவனத்தின் மதிப்பு 38.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், டெஸ்லாவின் மதிப்பு 31.98 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்திருக்கின்றன. இதில், டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி மாபெரும் வளர்ச்சியாக அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு 2020இல் வெறும் 12.41 பில்லியன்களாக மட்டுமே இருந்தன.

ஆனால், நடப்பாண்டிலோ 31.98 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இதன் மதிப்பு உயர்ந்திருக்கின்றது. இந்த மாபெரும் வளர்ச்சியின் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை கடந்த ஆண்டில் பெற்றார்.

2021 அதிக மதிப்பு கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் எட்டாம் இடத்தை ஃபோர்டும், ஒன்பதாம் இடத்தை வால்வோவும், பத்தாம் இடத்தை ஆடி நிறுவனமும் பிடித்திருக்கின்றன. இந்த நிறுவனங்களின் மதிப்பும் லேசாக உயர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

2021இல் ஃபோர்டு நிறுவனத்தின் மதிப்பு 22.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வால்வோ நிறுவனத்தின் மதிப்பு 17.75 அமெரிக்க டாலர்களாகவும், ஆடி நிறுவனத்தின் மதிப்பு 17.18 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தகவலின் முழுவிபரத்தையும் பட்டியலாகக் கீழே காணலாம்.

ரேங்க் | நிறுவனம் | 2021 மதிப்புகள் | 2020 மதிப்புகள் |
1 | டொயோட்டா | 59.47 பில்லியன் | 58.07 பில்லியன் |
2 | மெர்சிடிஸ் பென்ஸ் | 58.22பில்லியன் | 65.04 பில்லியன் |
3 | ஃபோக்ஸ்வேகன் | 47.02பில்லியன் | 44.89பில்லியன் |
4 | பிஎம்டபிள்யூ | 40.44 பில்லியன் | 40.48 பில்லியன் |
5 | போர்ஷே | 34.32 பில்லியன் | 33.91 பில்லியன் |
6 | டெஸ்லா | 31.98 பில்லியன் | 12.41 பில்லியன் |
7 | ஹோண்டா | 31.36 பில்லியன் | 33.10 பில்லியன் |
8 | ஃபோர்டு | 22.67 பில்லியன் | 18.51 பில்லியன் |
9 | வால்வோ | 17.75 பில்லியன் | 16.91 பில்லியன் |
10 | ஆடி | 17.18 பில்லியன் | 16.97 பில்லியன் |