19 நிமிஷன்தான்! ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல! எல்லாத்தையும் வாங்கிட்டாங்க! அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

Cadillac Lyriq எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு பணிகள் தொடங்கப்பட்ட 19 நிமிடங்களில் அனைத்து யூனிட்டுகளுக்குமான புக்கிங் நிறைவு பெற்றிருக்கின்றது. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த அமெரிக்காவையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. லிரிக் எலெக்ட்ரிக் கார்குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் (General Motor). இந்நிறுவனத்திற்கு சொந்தமான கடில்லாக் (Cadillac), மிக விரைவில் ஓர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் அப்புதிய தயாரிப்பு விற்பனைக்கு வர இருக்கின்ற நிலையில், நிறுவனம் அக்காருக்கான முன்பதிவு (Reservation) பணிகளை அமெரிக்காவில் அண்மையில் தொடங்கியது.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

இந்த பணிகள் தொடங்கப்பட்ட வெறும் 19 நிமிடங்களிலேயே நிறுவனம் விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்த அனைத்து யூனிட்டுகளுக்குமே முன் பதிவுகள் கிடைத்திருக்கின்றன. இது அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

'லிரிக் டெபியூட் எடிசன்' (2023 Lyriq Debut Edition) எனும் எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கான முன்பதிவே தொடங்கப்பட்ட 19 நிமிடங்களில் நிறைவு பெற்றிருக்கின்றது. இது மிக அதி வேகம் புக்கிங் நிறைவாகும். கார் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்ற நிலையில் பலர் மிகுந்த ஆர்வத்துடன், அதிக வேகத்தில் புக் செய்திருக்கின்றனர்.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

கடந்த 18ம் தேதி மதியம் 1 மணியளவில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சரியாக மதியம் 1.19 மணி ஆவதற்குள் அனைத்து யூனிட்டுகளுக்குமான புக்கிங்கும் நிறைவடைந்திருக்கின்றது. இதையடுத்து, கடில்லாக் லிரிக் இ-காருக்கான முன் பதிவுகள் நிறைவுற்றிருக்கின்றது. 60 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் கடில்லாக் லிரிக் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 44,15,430 (தோராயமாக வழங்கப்பட்ட மதிப்பு)-க்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் இக்காரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மிக விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. இதேபோல் தற்போது எத்தனை யூனிட்டுகளுக்கான புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன என்பது பற்றிய தகவலையும் ஜிஎம் நிறுவனம் வெளியிடவில்லை.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

இருப்பினும், 100 அமெரிக்க டாலர்கள் என்ற முன்-கட்டணத்தில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 கடில்லாக் லிரிக் எலெக்ட்ரிக் காரில் மிகப் பெரிய திரை பொருத்தப்பட்டிருக்கின்றது. இது சுமார் 33 இன்ச் அளவுக் கொண்டது என கூறப்படுகின்றது. க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக இது செயல்படும்.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

இத்துடன், 19 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஆடியோ சிஸ்டம், இரைச்சலை தவிர்க்கும் கேபின் வசதி, ஹீடட் ஸ்டியரிங் வீல் மற்றும் 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் லிரிக் மின்சார காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, மசாஜ் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் லிரிக்-இல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், சோர்வற்ற பயண அனுபவத்தை இக்காரின் பயன்பாட்டாளர்களால் பெற முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

மேலும், பொருட்களை வைத்துக் கொள்ளும் வகையில் ஸ்லைடிங் டிராவ்யர்கள், பின்கள் என இன்னும் பல எக்கசக்க அம்சங்கள் மற்றும் வசதிகள் லிரிக் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இவற்றுடன், காரை கவர்ச்சியாக்கும் வகையிலும் பல்வேறு வேலைகளை கடில்லாக் செய்திருக்கின்றது.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

அந்தவகையில், பெரிய கண்ணாடியினாலான மேற்கூரை, 20 இன்ச் வீல் அல்லது 22 இன்ச் வீல் (ஆப்ஷனல்), பெரிய க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றை கடில்லாக் நிறுவனம் லிரிக் காரில் பயன்படுத்தி இருக்கின்றது. இதேபோல், பாதுகாப்பு விஷயத்திலும் சமரசம் இன்றி நிறுவனம் அம்சங்களை வாரி வழங்கி இருக்கிறது.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

அந்தவகையில், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் தானே அசிஸ்ட் செய்யக் கூடிய ஸ்டியரிங், தானியங்கி பார்க்கிங், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங், இடைவெளியை அளிவிடும் வசதி, உயர்தர பார்வை திறன் கொண்ட கேமிராக்கள், கண்ணாடிக்கு பதிலாக கேமிரா, ரிவர்ஸின் போது தானாக பிரேக் பிடிக்கும் வசதி (தேவையற்ற மோதலை தவிர்க்க) என எக்கசக்க அம்சங்கள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

19 நிமிஷன்தான்... ஒரு யூனிட்டைகூட விட்டு வைக்கல... எல்லாத்தையும் வாங்கிட்டாங்க... அமெரிக்காவையே மிரள வைத்த புக்கிங்!

கடில்லாக் லிரிக் எலெக்ட்ரிக் காரில் 100.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், 340 எச்பி மற்றும் 440 என்எம் டார்க்கை வழங்கக் கூடிய மின் மோட்டார் ரியர் வீலில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது மிக சிறந்த வேகத்தை வெளிப்படுத்தக் கூடியதும் கூட. இத்துடன் மிக சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக 5-லிங்க் சஸ்பென்ஷன் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
2023 cadillac lyriq debut edition electric suv sells out in 19 minutes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X