இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்! ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரியுமா?

இரு எஞ்ஜின்களில் இயங்கும் வகையில் ஓர் குட்டி காரை கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் உருவாக்கியிருக்கின்றார். மினி கார்குறித்த மேலும் பல சுவாரஷ்ய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

உலகளவில் மிகப்பெரிய ரசிக பட்டாளத்தைக் கொண்ட வாகன மாடல்களில் வில்லிஸ் எஸ்யூவியும் ஒன்று. இதன் உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய சிறிய ரக வாகனத்தையே கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் உருவாக்கியிருக்கின்றார். ஆங்கிலத்தில் இதனை மினியேச்சர் ரக வாகனம் என்றழைக்கப்படுவதுண்டு.

இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதுமாதிரியான வாகனத்தையே கேரளாவைச் சேர்ந்த 21 வயதே ஆன இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த சிறிய ரக மினியேச்சர் வாகனத்தின் இயக்கத்திற்காக அவர் பஜாஜ் பல்சர் 180 பைக்கின் எஞ்ஜினை பயன்படுத்தியிருப்பது மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மிக சிறிய வில்லிஸ் வாகனத்தை உருவாக்கியவரின் பெயர் அருண் என்று கூறப்படுகின்றது. இவர் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இங்குள்ள ஓர் ஸ்கிராப் யார்டிலேயே அவர் பணி புரிந்து வருகின்றார். வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக அவர் இருக்கின்றார். இந்த ஆர்வத்தின் அடிப்படையிலேயே, தான் பணிபுரியும் யார்டுக்கு வந்த பழைய வாகனங்களின் கழிவுகளைக் கொண்டு அவர் சிறிய வில்லிஸ் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார்.

இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஜீப் வில்லிஸ் காரின் உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய பேனல்களை மட்டும் தானாகவே உலகே தகடுகளைக் கொண்டு அருண் உருவாக்கியிருக்கின்றார். அதேசமயம், எஞ்ஜின், டயர் மற்றும் வீல் ஆகியவற்றை வேறு வாகனங்களில் இருந்து பெற்றே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இருப்பினும் இந்த மினியேச்சர் வாகனம் அருணின் சொந்த முயற்சியிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், கன்னூர் வாசிகள் மற்றும் வாகன ஆர்வலர்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர். மினி ஜீப் வில்லிஸ் வாகனத்தை உருவாக்க டாடா நானோவின் சஸ்பென்ஷன், உலோக ரிம் ஆகியவற்றையும் இளைஞர் பயன்படுத்தியிருக்கின்றார். இதுமட்டுமின்றி மாருதி 800 காரின் பாகங்கள் சிலவற்றையும் தான் பயன்படுத்தியிருப்பதாக அருண் கூறியிருக்கின்றார்.

இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், ஒட்டுமொத்தமாக பல வாகனங்களின் உதிரிபாகங்களினாலேயே மினி வில்லிஸ் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்தில் பஜாஜ் பல்சர் பைக்கின் எஞ்ஜின் மட்டுமின்றி எஞ்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஓர் காரின் எஞ்ஜினாகும்.

இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இரண்டாவது எஞ்ஜினாக மாருதி ஆம்னியின் எஞ்ஜினே மினி வில்லிஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இரண்டு கியர்பாக்ஸ் லிவர்களை மினி வாகனம் பெற்றிருக்கின்றது. எனவே, அருண் உருவாக்கியிருக்கும் மினி ஜீப் ஓர் அட்டகாசமான ஜீப்பாக உருவாகியிருக்கின்றது.

இதனை உருவாக்க இளைஞருக்கு இரண்டு மாதங்கள் வரை ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக தான் ரூ. 70 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். பெரும்பாலான பொருட்களை தான் வேலை செய்யும் இடத்திலேயே குறைவான பெற்றதால் குறைந்த விலையில் இந்த மினி வாகனத்தை உருவாக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

Most Read Articles

English summary
21 Year Old Young Man Creates Mini Willys From Old Vehicle Scrap. Read In Tamil.
Story first published: Monday, July 26, 2021, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X