Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா நெக்ஸான் முதல் கியா சொனெட் வரை... விலை குறைவான டீசல்-ஆட்டோமேட்டிக் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...
இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான டீசல்-ஆட்டோமேட்டிக் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தன. இதன் விளைவாக பல கார்களும், வேரியண்ட்களும் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டன. இதில், பெரும்பாலானவை டீசல் இன்ஜின் கொண்டவைதான். பிஎஸ்-6 விதிகள் காரணமாக சில நிறுவனங்கள் டீசல் இன்ஜின் மாடல்களை முழுமையாக விற்பனையில் இருந்து விலக்கி கொண்டன.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இதற்கு ஒரு உதாரணம். மாருதி சுஸுகி தற்போது பெட்ரோல் இன்ஜின் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதற்காக நீங்கள் உங்களுடைய தேர்வில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் பிஎஸ்-6 சகாப்தத்திலும் பெரும்பாலான நிறுவனங்கள் டீசல் மாடல்களை தொடர்ந்து வழங்குகின்றன.

குறிப்பாக எஸ்யூவி ரக கார்களில் டீசல் இன்ஜின் இன்னமும் மிக முக்கியமான தேர்வாக இருந்து வருகிறது. எனவே இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருந்து வரும் விலை குறைவான டீசல்-ஆட்டோமேட்டிக் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்வோம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
டாடா நெக்ஸான் காரின் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி தேர்வுகளில் இந்த இன்ஜினை பெறலாம். நெக்ஸான் காரின் டீசல் ஏஎம்டி வேரியண்ட்கள், 9.92 லட்ச ரூபாய் முதல் 12.79 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300)
சப்-4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிக சக்தி வாய்ந்த மற்றும் டார்க் திறனை வாரி வழங்கும் டீசல் இன்ஜினை பெற்றுள்ள கார்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளது. இதன் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 117 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி தேர்வுகளில் இந்த இன்ஜின் தேர்வை வாடிக்கையாளர்கள் பெறலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் டீசல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள், 10.20 லட்ச ரூபாய் முதல் 12.30 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

கியா சொனெட் (Kia Sonet)
கியா சொனெட் காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான தேர்வில், 100 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதே சமயம் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனான தேர்வில் இதே இன்ஜின் 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கியா சொனெட் காரின் டீசல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள், 10.59 லட்ச ரூபாய் முதல் 13.19 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். கியா சொனெட் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.