ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

நிஸான் டீலர்ஷிப் ஒன்று ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

நிஸான் நிறுவனம் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை கடந்த டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு மாதத்திற்குள் நிஸான் மேக்னைட் காருக்கு 32,800க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. எனவே இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் ஒரு புதிய இன்னிங்ஸையே தொடங்கி வைத்துள்ளது என்று சொல்லலாம்.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

இந்த சூழலில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நிஸான் டீலர்ஷிப் பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்வை நடத்தியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, விசாகப்பட்டிணம், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகுளம் மாவட்டங்களின் நிஸான் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கண்டிபுடி நிஸான் என்ற டீலர்ஷிப் ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தற்போது மேக்னைட் காரை டெலிவரி கொடுக்கும் பணிகளை நிஸான் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. மேக்னைட் காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. இதனை குறைப்பதற்கான முயற்சிகளை நிஸான் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பது எந்த ஒரு நிறுவனத்திற்கும் நல்லதல்ல. ஏனெனில் சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்வத்தை இழந்து விடக்கூடும். எனவே உரிய நேரத்தில் கார்களை டெலிவரி கொடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும். எனவே மேக்னைட் காரின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை நிஸான் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர், இன்லைன்-3, நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இதில் ஒன்று. இதே இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷனும் கிடைக்கிறது. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

அதே சமயம் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகள் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் சிவிடி தேர்வும் கொடுக்கப்படுகிறது.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது. இதுதவிர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் காருடனும் நிஸான் மேக்னைட் போட்டியிடும்.

ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா?

வரும் நாட்களில் நிஸான் மேக்னைட் காரின் டெலிவரி பணிகள் இன்னும் வேகமெடுக்கும் என நம்பலாம். மேக்னைட் காரில் பல்வேறு வசதிகளையும் நிஸான் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுதவிர மிக சவாலான விலையில் மேக்னைட் காரை நிஸான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சவாலான விலை நிர்ணயமே நிஸான் மேக்னைட்டிற்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பிற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Image Courtesy: Kantipudi Nissan

Most Read Articles
English summary
36 Units Of Nissan Magnite Delivered By Andhra Pradesh Dealership In A Single Day - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X