காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

நகரும் மெஷின்கள் தான் கார்கள் ஆகும். இயந்திர கூறுகள் முதல் நுகர்பொருட்கள் வரையில் ஒரு கார் திறம்பட செயல்பட பொருத்த வேண்டியவைகளை வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அதேநேரம் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப கண்டுப்பிடிகளையும் விரிவுப்படுத்த முயல்கின்றன.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

இதற்காகவே ஆராய்ச்சி & தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகள் என்ற பிரிவை கிட்டத்தட்ட அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் கொண்டுள்ளன. இந்த வகையில் கண்டுப்பிடிக்கப்பட்ட தொழிற்நுட்பம் தான் சென்சார்களாகும். உலகளவிலான கார்களில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் 5 சென்சார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

ஆக்ஸிஜன் சென்சார்

கார்களின் என்ஜின் செயல்பாட்டிற்கு பெறப்படும் ஆக்ஸிஜன்கள் முக்கியமாகும். ஆக்ஸிஜன் முறையாக கிடைக்காதப்பட்சத்தில் சில கார்களின் என்ஜின்கள் பழுதாக நேருகின்றன. இந்த பிரச்சனையை சரிச்செய்யவே ஆக்ஸிஜன் சென்சார் கண்டுப்பிடிக்கப்பட்டது.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

பொதுவாக இந்த சென்சார் காரின் முன்பக்கத்தில் என்ஜின் அமைப்பில் இருந்து பல பிரிவுகளாக எக்ஸாஸ்ட் குழாய் பிரியும் பகுதியில் பொருத்தப்படுகின்றது. இது காரின் எக்ஸாஸ்ட் குழாய் பெறும் ஆக்ஸிஜனையும், வெளியே காரை சுற்றிலும் உள்ள ஆக்ஸிஜன் (O2) அளவுகளையும் ஒப்பிட்டு பார்த்து அவ்வப்போது என்ஜினிற்கான ஆக்ஸிஜன் அளவை சரி செய்யும்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

அதிகப்படியான காற்று ஓட்டம் சென்சார்

MAF எனப்படும் அதிகப்படியான காற்று ஓட்டம் சென்சார் காற்று வடிக்கட்டிக்கு அருகில் பொருத்தப்படுகிறது. இந்த சென்சார் பழுதாகினால் கார் உடனடியாக நின்றுவிடும். பெட்ரோல் கார் என்றால், அதிகளவில் பெட்ரோலை கார் உறிஞ்சும்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இது பழுதாகினால் சிவப்பு நிற விளக்கு எரியும். எம்ஏஎஃப் சென்சார் ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான சென்சாராக விளங்குகிறது. இதுவும் என்ஜின் அமைப்பிற்கு எந்த அளவிற்கு காற்று செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சென்சார் தான்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

என்ஜின் ஸ்பீடு சென்சார்

கார்களில் பொருத்தப்படும் மற்றொரு முக்கியமான சென்சார். க்ரான்க்‌ஷாஃப்ட் (crankshaft)-இல் பொருத்தப்படும் என்ஜின் ஸ்பீடு சென்சாரின் முக்கிய பணி, க்ரான்க்‌ஷாஃப்ட்டின் வேகத்தை கண்டறிவதாகும்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

க்ரான்க்‌ஷாஃப்ட்டின் வேகத்தை பொருத்தே என்ஜினின் வேகம் மற்றும் எரிபொருள் வழங்கப்படுவது உள்ளிட்டவை முறையாக கண்ட்ரோல் செய்யப்படுகின்றன. இந்த சென்சார் பழுதாகினால், காரின் க்ரூஸ் கண்ட்ரோலில் பிரச்சனை உண்டாகும்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

பன்மடங்கு முழுமையான அழுத்தம் சென்சார்

சுருக்கமாக MAP சென்சார் என அழைக்கப்படுகிறது. இதன் முதன்மையான பணி என்னவென்றால், இயக்கத்தின் போது என்ஜின் அமைப்பிற்கு உடனடியாக பல விதங்களில் ஏற்படும் அழுத்தங்களை கண்காணிப்பதாகும்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

இதன் மூலம் கிடைக்க பெறும் விபரங்கள் பின்னர் சிறந்த என்ஜின் செயல்திறனுக்காக எரிபொருள் விகிதங்களை மேம்படுத்த பயன்படுகிறது. இது மிக முக்கியமான கார் சென்சார்களுள் ஒன்றாகும்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

வெப்பநிலை சென்சார்

காரில் இருக்க வேண்டிய, நாம் பார்க்க போகும் கடைசி சென்சார். சிடிஎஸ் என மெக்கானிக்குகளால் அழைக்கப்படுகின்ற இது பெயருக்கு ஏற்றாற்போல் என்ஜின் குளிர்விப்பானின் வெப்பநிலையை கண்காணிக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் விபரங்கள் பிறகு என்ஜின் அமைப்பை குளிர்விக்கும் அமைப்புகளை ஒழுங்குப்படுத்துவதற்கு பயன்படுகிறது.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

குறிப்பாக குளிர்விப்பானில் உள்ள விசிறி இதன் முடிவை பொறுத்தே இயங்குகிறது. இந்த சென்சார் பழுதாகினால் முதல் வேலையாக குளிர்விப்பான் செயல்படாமல் போகும். இதனால் இயங்க இயங்க என்ஜினின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே செல்லும். இதனால் தீ பற்றி கொள்ள கூட வாய்ப்புள்ளது.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

இவை ஐந்தும் தான் ஒரு காரில் இருக்க வேண்டிய மிக முக்கிய சென்சார்கள் ஆகும். எனவே இவற்றில் ஏதாவது ஒன்று உங்கள் காரில் பழுதாகியது போன்று உணர்ந்தால் உடனடியாக அருகில் சேவை மையத்திற்கு காரை கொண்டு செல்லுங்கள்.

காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்!! இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்

ஏனெனில் இவ்வாறான பழுதுகள் சில சமயங்களில், நமக்கு நேரம் சரியில்லை என்றால் பெரிய விபத்திற்கு கூட வழிவகுக்கலாம். ஏற்கனவே சாலை விபத்துகளில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.20 லட்ச பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.

Most Read Articles

English summary
The Most Common Car Sensors And Their Function Explained.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X