பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

துணை ஆசிய கண்டம் என அழைக்கப்படும் நமது இந்தியா அளவில் பெரியதாக இருப்பதால், அனைத்து விதமான வானிலைகளை எதிர்கொள்ளக்கூடிய பகுதிகள் நம் நாட்டில் உள்ளன. அதாவது, சூடான நகரம் எனப்படும் சென்னை உள்ள இதே நாட்டில்தான் வருடத்தில் பல நாட்களுக்கு மைனஸில் வெப்பநிலையை கொண்ட ஜம்மு & காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளும் உள்ளன.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

இருப்பினும் வருட இறுதி மாதங்களிலும், துவக்க மாதங்களிலும் காஷ்மீரில் இருந்து கன்னியாக்குமரி வரையில் பனி சூழ்கிறது. வட இந்தியா அளவிற்கு இல்லையென்றாலும், தற்சமயம் நம்மூர்களிலும் இரவு நேரங்களில் கம்பளி ஆடையை உடுத்தாமல் வெளியே செல்ல முடிவதில்லை. சரி, கார்களில் செல்லலாம் என்று பார்த்தால், அப்போதும் சில பல அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. இதில் இருந்து தப்பிக்க, கார்களில் இருக்க வேண்டிய முக்கிய 5 அம்சங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

ஹீட்டட் இருக்கைகள் & ஸ்டேரிங் சக்கரம்

காரின் இயக்கம் மொத்தமுமே ஓட்டுனர் என்ற ஒருவரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆதலால் அவர் சவுகரியமாக, குளிர் காலங்களில் காருக்குள் கதகதப்பாக இருந்தால் மட்டுமே பயணம் எந்தவொரு அசாம்பாவிதமும் இல்லாமல் ஸ்மூத்தாக இருக்கும். அவர் குளிரில் நடுங்கியப்படி காரை இயக்க நேர்த்தால், அது சில நேரங்களில் விபத்தில் சென்று முடியலாம்.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

ஹீட்டட் இருக்கைகளும், ஸ்டேரிங் சக்கரமும் அவற்றிற்கு அடியில் ஒரு சுருள் மூலமாக வெப்பப்படுத்துகின்றன. இந்த வெப்பம் இருக்கை மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தின் லெதர் அலங்கரிப்பை தாண்டி ஓட்டுனரின் உடலில் வந்து படுகின்றன. பொதுவாக இத்தகைய வசதிகள் சில கார்களில் ஓட்டுனர் உள்பட முன் இருக்கை பயணிகளுக்காக வழங்கப்படுகின்றன. மிகவும் சில கார்களில் பின் இருக்கை பயணிகளுக்கும் சேர்த்து கொடுக்கப்படுகின்றன.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

ஃபாக் விளக்குகள்

எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனி சூழப்பட்ட சாலைகளில் காரை இயக்கி செல்லும்போது இத்தகைய விளக்குகள் பெரிதும் உதவும். சற்று பிரீமியம் தரத்திலான அம்சமாக இருப்பினும், தற்போதைய மாடர்ன் கார்கள் பலவற்றில் பரவலாக வழங்கப்படும் ஃபாக் விளக்குகள், காரின் முன்பக்கத்தில் சாலைக்கு மிக அருகாமையில் வழங்கப்படுகின்றன.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

இவற்றின் பணி என்னவென்றால், சாலையை தெளிவாக ஓட்டுனருக்கு காட்டுவதாகும். ஏனெனில் ஹெட்லேம்ப்களின் ஒளி பனி சூழ்ந்த சூழ்நிலைகளில் சாலை வரையில் ஊடுருவ முடியமால் போகலாம். இதனால் சாலையில் இருந்து கார் விலக்கி செல்லலாம் என்பதால் தற்போதைய கார்கள் பெரும்பாலானவற்றில் ஃபாக் விளக்குகளை கார் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. இருப்பினும் இத்தகைய விளக்குகள் உங்கள் கார்களில் உள்ளனவா என்பதை சரிப்பார்த்து கொள்ளுங்கள்.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

டிஃபோகர் (Defogger)

பனிகாலத்தில் காரை இயக்கும்போது, காரில் இருக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம். மழை காலங்களில் மட்டுமில்லாமல், குளிர்காலங்களிலும் கார் கண்ணாடிகளில் நீர் துளிகள் உருவாகுகின்றன. இவை காரில் ரிவர்ஸில் வரும்போது ஓட்டுனருக்கு சவாலானதாக மாறுகின்றன.இவற்றை வைபர் மூலமாக அப்புறப்படுத்தலாம் என்றாலும், பலருக்கு வைபரை ஆக்டிவ் செய்தவாறு காரை ஓட்ட பிடிப்பதில்லை.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

அதுமட்டுமின்றி, மழை காலத்தில் கண்ணாடிகளில் தொடர்ந்து நீர் படுவதை போல் இல்லாமல், பனி காலங்களில் நீர் குமிழ்கள் உருவாகுவதற்கு சற்று நேரத்தை எடுத்து கொள்ளும். இவற்றை கண்ணாடிகளின் மேற்பரப்பின் மீது சூடான காற்றை செலுத்துவதின் மூலமாகவே கரைய செய்யலாம். இந்த சூடான காற்றை வெளிப்படுத்தும் தொழிற்நுட்பத்திற்கு பெயர் தான் டிஃபோகர் ஆகும்.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

பின்புறத்தை காட்டும் வெளிப்புற ஹீட்டட் கண்ணாடிகள் (ORVMs)

மழை காலத்தை போல், குளிர் காலத்திலும் பயணத்தின் போது ஜன்னல் கண்ணாடிகளை கீழிறக்க பலர் விரும்பமாட்டார்கள். ஆனால் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் வெளிப்புறத்தில் தானே உள்ளன. அவற்றில் படும் நீர் துளிகளை கண்ணாடியை இறக்காமல் சரி செய்வது எவ்வாறு? இதற்காக கண்டுப்பிடிக்கப்பட்ட தொழிற்நுட்பமே ஹீட்டட் கண்ணாடிகள் ஆகும்.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

டிஃபோகரை போன்று இவையும் சூடான காற்றின் உதவியுடனே செயல்படுகின்றன. இத்தகைய வசதிகள் சற்று அதிக விலை கொண்ட கார்களிலேயே வழங்கப்படுகின்றன. இந்த கார்களில் டிஃபோகர், ஹீட்டட் ORVMs இவை இரண்டிற்கான பொத்தான்கள் உட்புற மைய கன்சோலில் கொடுக்கப்படுகின்றன. இந்த வசதிகள் உங்கள் காரில் இல்லையென்றால், கஸ்டமைஸ்ட் செய்து பெற்று கொள்ளலாம்.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

டிராக்‌ஷன் மோட்கள்

பனி காலங்களிலும் சாலைகள் வழுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. தினந்தோறும் பனி கொட்டும் பகுதிகளில் வசிப்பவர்கள் இதற்காக என்றே பனி டயர்கள் எனப்படும் பிரத்யேகமான டயர்களை வாங்கி தங்களது காரில் பொருத்தி கொள்வர். ஆனால் நம்மூரில் அவ்வாறு பனி மழை எதுவும் பெய்வதில்லை. சில வாரங்களுக்கு மட்டுமே அதிகப்பட்சமாக கடுமையான பனி பொழிவு இருக்கும், அவ்வளவுதான்.

பனி காலத்தில் சவுகரியமான பயணத்திற்கு காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!! உங்கள் காரில் எத்தனை உள்ளன?

இதற்கு காரில் டிராக்‌ஷன் மோட்கள் இருந்தாலே போதும். டிராக்‌ஷன் மோட்கள் ஆனவை தேவைக்கு ஏற்ப என்ஜினின் ஆற்றல் மற்றும் பிரேக்கிங் அமைப்பை கண்ட்ரோல் செய்து வேகத்தை அதிகரிக்கும்போதும், பிரேக் கொடுக்கும்போதும் மற்றும் வளைவுகளில் திருப்பும்போதும் ஏற்படும் சறுக்கல்களை தவிர்க்கும். முன்-சக்கர-ட்ரைவ் மாடல்களான கியா செல்டோஸ் & ஹூண்டாய் க்ரெட்டா போன்றவற்றில் கூட டிராக்‌ஷன் மோட்கள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
5 Most Useful Features While Driving In The Winter.
Story first published: Thursday, December 23, 2021, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X