வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

இந்தியாவில், ஏன் உலகளவிலேயே அதிகளவில் விற்பனையாகும் கார்கள் என்றால் அவை ஹேட்ச்பேக்குகளாகவும், செடான்களாகவும் அல்லது எஸ்யூவிகளாகவுமே இருக்கின்றன. இருப்பினும் இந்த மூன்று ரகத்தையும் கலந்தாற்போன்ற உடல் அமைப்பில் கார்களை வாங்க விரும்புவோரும் இருக்க தான் செய்கின்றனர்.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

இவ்வாறான கார்களை க்ராஸ்ஓவர்கள் (சியூசி) என அழைப்பர். ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி உடல் ஸ்டைலிலேயே ஏகப்பட்ட பிரபலமான கார்கள் இருக்கலாம். இருப்பினும் அவற்றை எல்லாம் கடந்து க்ராஸ்ஓவர் தோற்றத்தில் காரை எடுக்க விரும்புவதால், பெரும்பாலும் க்ராஸ்ஓவர் கார்கள் அவற்றின் தோற்றத்தினால் உங்களை கவர்ந்துவிடக்கூடும்.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

நடைமுறை மற்றும் செயல்படுதிறனிலும் இவ்வாறான ஸ்டைல் கொண்ட கார்களில் பெரிய அளவில் எந்தவொரு அதிருப்தியும் ஏற்படுவதில்லை. இருப்பினும் சில க்ராஸ்ஓவர் கார்களால் நம் நாட்டு சந்தையில் நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியவில்லை. அவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு, நீண்ட வருடங்களுக்கு தாக்கு பிடிக்காமல் விற்பனை நிறுத்தப்பட்ட ஐந்து க்ராஸ்ஓவர்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

ரெனால்ட் கேப்ச்சர்

2017ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் கேப்பச்சர், க்ராஸ்ஓவரின் டிஎன்ஏ-வை கொண்ட பிராண்டின் பிரீமியம் ரக எஸ்யூவியாகும். இதனால் பிரீமியம் சியூவி காராக வாடிக்கையாளர்களை பெற்றாலும், கேப்ச்சரின் முரட்டுத்தனமான தோற்றத்தை பெரும்பாலானோர் கண்டு கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

210மிமீ அளவில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் என க்ராஸ்ஓவருக்கான நடைமுறை பண்பை கொண்டிருந்தாலும், இந்த ரெனால்ட் க்ராஸ்ஓவர் வாடிக்கையாளர்களை கவர்வதில் பெரிதும் தள்ளாடியது. இதனால் கடந்த 2020ஆம் ஆண்டில் கேப்ச்சரின் விற்பனையை இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் நிறுத்தி கொண்டது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

ஃபோக்ஸ்வேகன் போலோ க்ராஸ்

போலோ க்ராஸ், இந்த கார் பலருக்கு நினைவில் இல்லாமல் கூட இருக்கலாம். ஏனெனில் இந்தியாவில் க்ராஸ்ஓவர்கள் முதன்முதலாக அறிமுகமாக ஆரம்பித்த நேரத்தில், அதாவது 2013ல் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கார் இது. வழக்கமான போலோ ஹேட்ச்பேக் காரின் ஸ்போர்டியர் வெர்சனாக இது விளங்கியது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

ஸ்போர்டியர் வெர்சன்கள் என்றாலே பொதுவாக ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து சற்று முரட்டுத்தனமானதாக காட்டப்பட வேண்டும் என்பதற்காக வாகனத்தை சுற்றுலும் பிளாஸ்டிக் பேனல்கள் வழங்கப்படுவது வழக்கம். இதில் போலோ க்ராஸும் விதிவிலக்கு அல்ல.

மேலும் இந்த மாற்றங்களினால் க்ராஸ்ஓவர் போன்று காட்சிதந்த இந்த ஃபோக்ஸ்வேகன் காரையும் வாடிக்கையாளர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் அறிமுகம் செய்யப்பட்ட 2 வருடத்தில், 2015ல் போலோ க்ராஸ் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

டாடா ஆரியா

மேற்கூறப்பட்ட க்ராஸ்ஓவர்கள் வாடிக்கையாளர்களை கவராததால் நடையை கட்டின. ஆனால் டாடா ஆரியா கணிசமான வாடிக்கையாளர்களை விற்பனையில் இருந்த சமயத்தில் பெற்றுவந்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற விரைவாக எழுச்சி கண்ட கார்களின் போட்டியால் இதன் விற்பனையை நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு டாடா மோட்டார்ஸ் தள்ளப்பட்டது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

ஆரியா, இது எந்த மாதிரியான கார் என்று டாடா நிறுவனத்திற்கே சரியாக தெரியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் எம்பிவி, எஸ்யூவி, செடான் என்ற மூன்று விதமான உடற் அமைப்பிற்கும் இடையில் டாடா ஆரியாவின் தோற்றம் நிற்கிறது. இருப்பினும் டாடாவின் நேர்த்தியான டிசைனில் வெளிவந்த கார்கள் என்று பார்க்கும்போது, அதில் ஆரியாவின் பெயரை சொல்லாமல் இருக்க முடியாது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

டொயோட்டா எடியோஸ் க்ராஸ்

எடியோஸ் லிவா ஹேட்ச்பேக் காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதை அடுத்து, டொயோட்டா நிறுவனம் இந்த லிவா மாடலின் அடிப்படையில் கொண்டுவந்த க்ராஸ்ஓவர் தான் எடியோஸ் க்ராஸ் ஆகும். சுற்றிலும் வலிமையான பிளாஸ்டிக் பேனல்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த டொயோட்டா கார் முன்பக்கத்தில் எடியோஸ் லிவா காரை காட்டிலும் பெரிய அளவிலான பம்பரை பெற்றது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

கருப்பு நிற பிளாஸ்டிக் பேனல்களுடன் எடியோஸ் க்ராஸின் நான்கு பக்கங்களிலும் சில்வர் நிற தொடுதல்கள் மற்றும் ஸ்போர்டியரான அலாய் சக்கரங்கள் என லிவா மாடலை காட்டிலும் இந்த எடியோஸ் வாகனம் பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

எடியோஸ் லிவா உடன் ஒப்பிடுகையில், க்ராஸ் மாடல் கூடுதல் நீளம், அகலம் மற்றும் உயரம் கொண்டது. அழகான க்ராஸ்ஓவர்களுள் ஒன்றாக இந்த டொயோட்டா கார் விளங்கினாலும், அப்டேட் இல்லாத உட்புற அம்சங்களினால் கடந்த 2020ஆம் ஆண்டோடு இதன் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

ஃபியட் அவென்ச்சுரா

ஹேட்ச்பேக் கலந்த க்ராஸ்ஓவராக ஃபியட் அவென்ச்சுரா மிக நேர்த்தியான தோற்றம் கொண்ட மாடலாகும். ஃபியட் புண்டோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது நீளம், அகலம் மற்றும் உயரம் மட்டுமின்றி 205மிமீ-இல் நன்கு நீளமான க்ரவுண்ட் க்ளியரென்ஸையும் கொண்டிருந்தது.

வாடிக்கையாளர்களை கவராமல் நடையை கட்டிய அழகான 5 க்ராஸ்ஓவர் கார்கள்! ரெனால்ட் கேப்ச்சரில் இருந்து போலோ க்ராஸ் வரை

பின்பக்கத்தில் கூடுதல் சக்கரம் என பக்கா ஃபியட்டின் தயாரிப்பு வாகனமாக அவென்ச்சுரா விளங்கினாலும், அந்த சமயத்தில் ஃபோர்டின் விற்பனைக்கு பிந்தைய சேவை நாடு முழுவதும் விரிவடைந்ததாக இல்லை. இதுவே அவென்ச்சுராவின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பவிடாமல் தடுக்க, 2019ல் இந்த ஃபியட் க்ராஸ்ஓவரின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.

Most Read Articles

English summary
5 Good Discontinued Crossover Cars In India.
Story first published: Monday, August 9, 2021, 22:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X