உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்! 5முக்கிய அறிகுறிகளின் பட்டியல்

ஹேண்ட்-பிரேக் செயலற்று போவதற்கான ஐந்து முக்கிய அறிகுறிகளை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

ஹேண்ட் பிரேக், கார்களை நிறுத்திய பின்னர் அது நகர்ந்து சென்றுவிடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, செங்குத்தான (சரிவான) மற்றும் மலைப் பகுதிகளில் நிறுத்தும்போது வாகனங்கள் நிலையாக நிற்கும் பொருட்டு அவை பயன்படுத்தப்படுகின்றன.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

இதுமட்டுமின்றி, சில நேரங்களில் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டும் ஹேண்ட் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முக்கியமான மற்றும் பன்முக வசதிக் கொண்ட ஹேண்ட் பிரேக்கை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. ஆனால், பெரும்பாலானோர் இதனைக் கண்டுக் கொள்வதே இல்லை.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

குறிப்பாக, சர்வீஸின்போது அதன் பிரேக் திறனைக்கூட பலர் கவனிக்காத நிலையே தென்படுகின்றது. இதன் விளைவாக ஹேண்ட்-பிரேக் ஃபெய்லியர் ஆகும் நிலை உருவாகின்றது. இது பெரும் ஆபத்தான நிலையை உருவாக்க நேரிடும். அதேவேலையில், ஹேண்ட்-பிரேக் ஃபெய்லியர் ஆவதற்கு முன்னர் சில சமிக்ஞைகளை வழங்கும்.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

அவை என்ன என்பது ஆராய்ந்தாலே தேவையில்லா இக்கட்டான சூழ்நிலையை நம்மால் தவிர்க்க முடியும். ஹேண்ட் பிரேக்குகள் தோல்வியடையும் முன் எழுப்பக் கூடிய சமிக்ஞைகள் என்ன அது குறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

இருக்கமான (Tight) ஹேண்ட் பிரேக்

வழக்கத்திற்கு மாறாக ஹேண்ட் இருக்கமாக இருக்கின்றது என்றால் அதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இது பிரேக் ஒயரில் ஏற்பட்டிருக்கும் கோளாறை குறிக்கிறது. மிக இருக்கமாக இருப்பதால் அவசர காலங்களில் ஹேண்ட்-பிரேக்கை பயன்படுத்த முடியா நிலை உருவாகும். இது தேவையற்றை இன்னல்களை உருவாக்க நேரிடும்.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

ஆகையால், காரில் ஹேண்ட்-பிரேக் அதிக இருக்கமான நிலையில் இருந்தால் உடனடியாக மெக்கானிக்கை அணுகுவது மிக சிறந்தது. அதேவேலையில் இருக்கமாக ஹேண்ட் பிரேக் இருக்குமானால் அது டயர்களையும் பதம் பார்க்க ஆரம்பித்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

வழக்கத்திற்கு மாறான இலகு

மிகவும் இருக்கமாக செயல்படுவதைப் போலவே மிகவும் லேசாகவும் ஹேண்ட்-பிரேக்குகள் செயல்படக் கூடாது. ஒயர் சரியான அலைன்மென்டில் இல்லை என்பது இது உணர்த்துகிறது. இதனாலும் ஹேண்ட்-பிரேக் சில நேரங்களில் செயலற்று போகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆகையால், வழக்கத்திற்கு மாறாக மிகவும் லேசாகவும் ஹேண்ட்-பிரேக் செயல்பட்டாலும் அதை உடனடியாக கவனிப்பது நல்லது.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

ஹில் டெஸ்ட்:

உங்கள் ஹேண்ட்பிரேக் சிறப்பாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்ய ஒரு சிறந்த வழி. ஓர் சாய்வான அல்லது மலையின் இறக்க பாதையில் ஹேண்ட் பிரேக் போட்டு காரை நிறுத்த வேண்டும். கார் சிறிதளவுகூட நகராமல் இருந்தால் உங்களின் ஹேண்ட் பிரேக் நல்ல முறையில் இருக்கின்றது என அர்த்தம். மாறாக, சிறிதளவு நகர்ந்தால்கூட அதில் ஏதோ பழுது ஏற்பட்டிருக்கின்றது என்றே அர்த்தம். இது மிக விரைவில் ஹேண்ட்-பிரேக் செயலற்றுபோக இருக்கின்றது என்பதை வெளிக்காட்டக் கூடிய நிகழ்வாகும்.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

ஹேண்ட்பிரேக்கின்போது எதிர்ப்பு இல்லாமல் இருத்தல்

நீங்கள் எப்போதாவது தற்செயலாக ஹேண்ட்-பிரேக்கில் இருக்கும்போதே காரை எடுக்க நேர்ந்திருக்குமானால், அப்போது, ஏதாவது இடையூறை நீங்கள் சந்தித்திருக்க வேண்டும். அப்படி நீங்கள் அதைச் சந்திக்கவில்லை என்றால் உங்களின் ஹேண்ட்-பிரேக்கில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அதேவேலையில், ஹேண்ட் பிரேக் போட்டவாறு காரை பயன்படுத்தினால் சில கோளாறுகளை ஏற்படுத்த வழி வகுக்கும். அதேநேரத்தில் அழுத்தமில்லாமல் கார் பயணிக்கிறது என்றால் எந்த நேரத்திலும் அந்த ஹேண்ட் பிரேக் பயன்படாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

செயல்படாத நிலை

சில நேரங்களில் ஹேண்ட் பிரேக்கை விளக்கிய பின்னரும் வாகனம் அழுத்தமாக (பிரேக் பிடித்தவாறு) செல்லும். இது ஹேண்ட்-பிரேக் வீல்களை விட்டு விலகாத நிலையை குறிக்கிறது. இதுவும், ஹேண்ட் பிரேக் செயலற்று போனதற்கான அடையாளம் ஆகும். ஹேண்ட் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் ஆகும்.

உடனே கவனிச்சிருங்க... இது எல்லாமே ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆகுவதற்கான அர்த்தம்... 5 முக்கிய அறிகுறிகளின் பட்டியல்!

நீண்ட நாள் கார் நிறுத்தி வைக்கும்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்துவதனால் இத்தகைய நிலை உருவாகும். எனவேதான் நீண்ட நாட்கள் காரை நிறுத்தும்போது அவ்வப்போது சிறிது இயக்க பார்த்து பின்னர் பழைய ஓய்வெடுக்கும் நிலைக்கு காரை விட வேண்டும் என வாகனத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Most Read Articles
English summary
5 important symptoms of a failing handbrake
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X