Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

புதிய தலைமுறை கிரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் ஹூண்டாய் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முற்றிலும் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா உருவாக்கப்பட்டுள்ளது. சற்றே பெரிய கார்களுக்கும் இந்த பிளாட்பார்ம்மை பயன்படுத்தி கொள்ள முடியும்.

எனவே இந்த பிளாட்பார்ம்மை பயன்படுத்தி, 7 சீட்டர் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹூண்டாய் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் கிரெட்டாவின் அடிப்படையில்தான் இந்த 7 சீட்டர் கார் உருவாக்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா இந்திய சந்தையில் வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் நடப்பாண்டு இறுதியில்தான் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஏப்ரல் மாதமே விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இடையில் இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ஹூண்டாய் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, 7 சீட்டர் கிரெட்டா காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தீவிரமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது, 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா பலமுறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

இந்த புதிய 7 சீட்டர் மாடலில், கூடுதலாக மூன்றாவது வரிசை இருக்கைகள் சேர்க்கப்படும் நிலையில், கேபின் லே-அவுட் 5 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டாவை போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போல், 7 சீட்டர் கிரெட்டாவிலும் வசதிகளுக்கு நிச்சயம் பஞ்சமிருக்காது.

இதன்படி ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூ லிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன் ரூஃப், முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட வசதிகள் 7 சீட்டர் கிரெட்டாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் 7 இன்ச் டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், பேடில் ஷிப்ட்டர்கள் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 5 சீட்டர் கிரெட்டாவில் உள்ள அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்தான், 7 சீட்டர் மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த 7 சீட்டர் மாடல், அல்காசர் என்ற பெயரில் அழைக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா சஃபாரி மற்றும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன், 7 சீட்டர் கிரெட்டா நேருக்கு நேராக போட்டியிடும். இதுகுறித்து காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.