Just In
- 2 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 3 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 3 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
- 4 hrs ago
ஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா
Don't Miss!
- News
ஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்
- Finance
டாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு மானியம் இல்லை.. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள்... இந்தியாவின் மலிவு விலை காரின் விளம்பரத்தின்மீது பிரபல அரசு துறை புகார்!!
மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான நிஸான் மேக்னைட் காரின் விளம்பரத்தின்மீது விளம்பர தர நிர்ணய கவுன்சில் பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

நிஸான் நிறுவனத்தின் புதுமுக கார் நிஸான் மேக்னைட். இது, ஓர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். தற்போது இந்தியாவின் மிக மலிவு விலையிலான காராக இது விற்கப்பட்டு வருகின்றது. இந்த காரின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக நிஸான் நிறுவனம் விளம்பர வீடியோ ஒன்றை மிக சமீபத்தில் வெளியிட்டது.

இந்த விளம்பர வீடியோ மீதே ஏஎஸ்சிஐ (ASCI) ஓர் பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றது. ஏஎஸ்சிஐ என்பது விளம்பர தர நிர்ணய கவுன்சில் (Advertising Standards Council Of India) ஆகும். இதுவே, கார் உற்பத்தியாளர் பொய்யான விளம்பர பிரச்சாரத்தை செய்து வருவதாக புகார் கூறியிருக்கின்றது.

தற்போது ஒளிப்பரப்பாகி வரும் மேக்னைட் கார்குறித்த விளம்பர வீடியோவில், இக்கார் அனைத்திலும் சிறந்த வாகனம் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில், "ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியில் மிக சிறந்தது", "மிக சிறந்த எரிபொருள் சிக்கனம் (20 கிமீ)", "சிறந்த பின்புற முழங்கால் அறை (593 மிமீ)" மற்றும் "சிறந்த எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டிஆர்எல் மற்றும் மூடுபனி விளக்குகள்" என அனைத்திலுமே இக்கார் சிறந்தது என கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே தெளிவற்ற மற்றும் தவறான கூற்றுக்கள் என ஏஎஸ்சிஐ கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நிஸான் நிறுவனம் அவர்களின் பதில்களைச் சமர்ப்பித்துள்ளனர். குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பதில் கருத்தை நிஸான் வெளியிட்டிருக்கின்றது. அதாவது, காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனையில் இருக்கும் பிற கார்களைக் காட்டிலும் நிஸான் மேக்னைட் கொண்டிருக்கும் அம்சங்கள் சிறந்தது என அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அந்தவகையில், ஒயர்லெஸ் இணைப்பு வசதியான ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகள் சிறந்தவை என்பதை நிரூபிக்கும் விதமாக அது கூறியதாவது, "பெரும்பாலான காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் யுஎஸ்வி ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு வசதிகளே கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மேக்னைட் காரிலோ இந்த அம்சம் ஒயர்லெஸ் வசதியில் வழங்கப்படுகின்றது. இதற்கு போட்டியாக கியா சொனெட் காரிலும் இந்த அம்சம் ஒயர்லெஸ் வசதியுடன் காட்சியளிப்பது குறிப்பிடத்தகுந்தது.

மைலேஜ், அராய் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட மேக்னைட் கார் அதிகபட்சமாக 20 கிமீ மைலேஜை வழங்கும். இதுவும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும் பிரிவின் மிக சிறந்த மைலேஜ் ஆகும். தொடர்ந்து, இதன் க்னீ (முழங்கால்) ரூம் அளவும் 593 மிமீ அளவுடையதாக இருக்கின்றது. இது சற்று இட வசதிக் கொண்டது என நிறுவனம் கூறுகின்றது.

இவ்வாறு அனைத்து ஏஎஸ்சிஐ-இன் அனைத்து புகார்களுக்கும் நிஸான் பதில் கொடுத்திருக்கின்றது. ஆனால், "இந்த தகவல்கள் போதுமானதாக இல்லை. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மேக்னைட் அதன் பிரிவில் 'சிறந்தது' என்பதை நிரூபிக்கக்கூடிய மூன்றாம் தரப்பு ஒப்பீட்டு தரவை வழங்க வேண்டும்" என கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்த நிஸான் தற்போதைய ஒப்பீடு அறிவிப்புகள் மற்றும் போட்டியாளர்கள் வழங்கிய தகவல்களின்படி செய்யப்பட்டது என்று கூறினார். போட்டியாளரின் வலைத்தளம் அல்லது சமூக ஊடக மேடையில் விவரங்கள் கிடைக்காத உரிமைகோரல்களுக்காக, விளம்பரதாரர்கள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினராகக் கருதப்படும் டீம் பிஹெச்.பி போன்ற ஆட்டோ போர்ட்டல்களிலிருந்து தரவை சேகரித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கும் நிஸான் மறுப்பு தெரிவித்து மாற்று கருத்து கூறியது. ஆனால், எந்த பதில்களும் பொருந்தவில்லை என ஏஎஸ்சிஐ கூறியது. தொடர்ந்து, தற்போது ஒளிப்பரப்பாகும் விளம்பரத்தைத் திரும்பெருமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்த விளம்பரத்தை மாற்றியமைத்து பின்னர் அதனை ஒளிப்பரப்புமாறும் கூறியுள்ளது.

நிஸான் மேக்னைட் காருக்கு தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த கார் மலிவு விலையில் விற்கப்பட்டு வந்தாலும், பலர் இக்காரின் அதிக விலைக் கொண்ட உயர்நிலை மாடலை வாங்கி வருகின்றனர். இந்த கார் ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.