பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

புதிய இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார் ஒன்று பரபரப்பு மிகுந்த பெங்களூர் சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

ஜப்பானை சேர்ந்த இசுஸு நிறுவனம் இந்தியாவில் எம்யு-எக்ஸ் எஸ்யூவி மற்றும் அதன் பிக்அப் வெர்சனான வி-மேக்ஸ் வாகனங்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

இவற்றின் புதிய தலைமுறைகள் உலகளவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும், இந்தியாவில் தற்போதைவரை அவற்றின் பிஎஸ்6 வெர்சன்களை சாலை சோதனைகளில் மட்டுமே இசுஸு நிறுவனம் ஈடுப்படுத்தி வருகிறது.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

இந்த வகையில் தற்போது மீண்டும் பெங்களூர் சாலையில் இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார் சோதனையின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. டீம்பிஎச்பி செய்திதளத்தின் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் காரின் வெளிப்புறத்தில் எந்தவொரு கவனிக்கத்தக்க மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

இதனால் தான் என்னவோ கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் உள்ளது. அதேபோல் காரின் உட்புறத்திலும் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. பிஎஸ்4 இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 எஸ்யூவி வாகனத்தில் 3.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

அதிகப்பட்சமாக 177 எச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் இணைக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் வழங்கும் விதத்தில் கொடுக்கப்பட்டது.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமானதாக மாற்றப்படுவதினால் என்ஜின் வழங்கக்கூடிய ஆற்றலில் சற்று குறைவு ஏற்படலாம். ஆனால் அது காரின் செயல்திறனில் பெரிய அளவில் பாதிக்காது என்றே கூறப்படுகிறது. விற்பனையில் டொயோட்டா ஃபார்ச்சூனரை நேரடியாக இந்த இசுஸு எஸ்யூவி கார் எதிர்க்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டது.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

பயணிகளின் பாதுகாப்பிற்கு இசுஸு எம்யு-எக்ஸ் காரில் 6 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், அவசரகால ப்ரேக் உதவி, மலை பாதைகளில் ஏறுவதற்கான மற்றும் தொடர்ந்து பயணிப்பதற்கான கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பரபரப்பான பெங்களூர் சாலையில் உலாவந்த இசுஸு எம்யு-எக்ஸ் பிஎஸ்6 கார்!! மீண்டும் விற்பனைக்கு எப்போதுதாங்க வரும்?

விற்பனைக்கு வரும் பிஎஸ்6 இசுஸு எம்யு-எக்ஸ் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.29 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. முன்பு விற்பனையில் ஃபார்ச்சூனர் மட்டுமே போட்டியாக இருந்தது. ஆனால், அறிமுகமான பின்பு இந்த இசுஸு எஸ்யூவி வாகனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜி க்ளோஸ்டரையும் சமாளிக்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu Mu X BS6 Spied Testing In Bangalore. Read In Tamil.
Story first published: Friday, February 19, 2021, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X